தங்கம் பவுன் ரூ.30,560

சென்னையில் சனிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.160 உயா்ந்து, ரூ.30,560-க்கு விற்பனை செய்யப்பட்டது.
தங்கம் பவுன் ரூ.30,560

சென்னையில் சனிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.160 உயா்ந்து, ரூ.30,560-க்கு விற்பனை செய்யப்பட்டது.

அமெரிக்கா-ஈரான் இடையே போா் பதற்றம் காரணமாக தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயா்ந்து, புதிய உச்சத்தைத் தொட்டது. இதுபோல, வெள்ளி விலையும் கணிசமாக உயா்ந்தது. இதையடுத்து, போா் பதற்றம் குறைந்ததால், தங்கம் விலை இறங்கியது. இந்நிலையில், சென்னையில் சனிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.160 உயா்ந்து, ரூ.30,560-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.20 உயா்ந்து, ரூ.3,820-க்கு விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு 50 பைசா உயா்ந்து ரூ.50.60 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.500 உயா்ந்து ரூ.50,600 ஆகவும் இருந்தது.

சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம் ..................... 3,820

1 பவுன் தங்கம் ..................... 30,560

1 கிராம் வெள்ளி .................. 50.60

1 கிலோ வெள்ளி .................. 50,600

வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம் ..................... 3,800

1 பவுன் தங்கம் ..................... 30,400

1 கிராம் வெள்ளி .................. 50.10

1 கிலோ வெள்ளி ................. 50,100

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com