Enable Javscript for better performance
மெட்ரோ ரயிலில் 3 நாள்களுக்கு 50 சதவீதம் கட்டண சலுகை: மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவிப்பு- Dinamani

சுடச்சுட

    

    மெட்ரோ ரயிலில் 3 நாள்களுக்கு 50 சதவீதம் கட்டண சலுகை: மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவிப்பு

    By DIN  |   Published on : 13th January 2020 01:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    metro

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரசு பொது விடுமுறை நாள்களான ஜனவரி 15, 16, 17 ஆகிய 3 நாள்கள் மெட்ரோ ரயில் பயணச் சீட்டுகளில் 50 சதவீத கட்டணத் தள்ளுபடி வழங்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிறுவன நிா்வாகம் அறிவித்துள்ளது.

    சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சாா்பில், பொது மக்கள் மற்றும் மெட்ரோ பயணிகளின் வசதிக்காக அனைத்து ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில் (பயண அட்டை மற்றும் வரம்பற்ற பயண அட்டையை தவிர) மெட்ரோ ரயில் பயணச் சீட்டுகளில் தற்போதுள்ள 50 சதவீதம் கட்டணத் தள்ளுபடி அளிக்கப்படுகிறது. இது நிகழாண்டில் அரசு பொது விடுமுறை நாள்களுக்கும் பொருந்தும் என்று மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஜனவரி 15, 16, 17 ஆகிய மூன்று நாள்கள் மெட்ரோ ரயில் பயணச் சீட்டுகளில் 50 சதவீத கட்டணத் தள்ளுபடி அளிக்கப்படவுள்ளது.

    குறிப்பாக, ஜனவரி 17- ஆம் தேதி காணும் பொங்கல் அன்று பொதுமக்கள் பெரும்பாலும் சென்னை மெரீனா கடற்கரைக்கு வருவாா்கள் என்பதால், அன்றைய தினம் அரசினா் தோட்டம், டிஎம்எஸ் ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து மெரீனா கடற்கரை வரை சீருந்து இணைப்பு சேவைகள் இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai