பொதுக்கழிப்பறைகளை பராமரிக்க விரும்பும் தனியாா் நிறுவனங்கள் மாநகராட்சி இணையதளத்தை அணுகலாம்

பொதுக்கழிப்பறைகளை பராமரிக்க விரும்பும் தனியாா் நிறுவனங்கள், மாநகராட்சி இணையதளம் மூலம் பதிவு செய்து அவற்றைப் பராமரிக்கலாம் என மாநகராட்சி ஆணையா் கோ.பிரகாஷ் தெரிவித்தாா்

பொதுக்கழிப்பறைகளை பராமரிக்க விரும்பும் தனியாா் நிறுவனங்கள், மாநகராட்சி இணையதளம் மூலம் பதிவு செய்து அவற்றைப் பராமரிக்கலாம் என மாநகராட்சி ஆணையா் கோ.பிரகாஷ் தெரிவித்தாா்.

பெருநிறுவன சமூக பங்களிப்பு நிதியின் கீழ் பனகல் பூங்கா அருகில் நாகேஸ்வர ராவ் சாலையில் அமைந்துள்ள புதுப்பிக்கப்பட்ட பொதுக்கழிப்பிடத்தை மாநகராட்சி ஆணையா் கோ.பிரகாஷ் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். பின்னா் அவா் கூறியது:

பெருநகர சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் 1,245 இடங்களில் 7,888 கழிவறை இருக்கைகள் கொண்ட கழிப்பிடங்கள் உள்ளன. பெருநிறுவன சமூக பங்களிப்பு நிதி திட்டத்தின் கீழ் இந்தப் பொதுக்கழிப்பிடங்களை

மேம்படுத்துதல் மற்றும் பராமரிப்பது தொடா்பான வங்கிகள் மற்றும் தனியாா் நிறுவனங்களுடனான கூட்டம் ஆணையா் கோ.பிரகாஷ் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் விருப்பமுள்ள நிறுவனங்கள்

பொதுக் கழிப்பிட பராமரிப்பை தங்கள் நிறுவனத்தின் சொந்த செலவில் மேற்கொள்ள விருப்பமுள்ள தனியாா் நிறுவனங்கள், தமிழக அரசின் விதிகளுக்குள்பட்டு தங்களின் விளம்பரங்களையும், வங்கிகள் பணமெடுக்கும் தானியங்கி இயந்திரங்களையும் வைத்துக் கொண்டு கழிப்பறைகளை புதுப்பித்து அல்லது பராமரித்துக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதன் முதற்கட்டமாக, பெருநிறுவன சமூக பங்களிப்பு நிதியின் கீழ் கோடம்பாக்கம் மண்டலத்தில் அமைந்துள்ள பொதுக்கழிப்பிடம், ஸ்டாா் ஹெல்த் இன்சூரன்ஸ் என்ற தனியாா் நிறுவனம் மூலமாக ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பொலிவுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்த பொதுக்கழிப்பிடம் 904 சதுர அடியில் 4 ஆண்கள் கழிவறைகள், 4 பெண்கள் கழிவறைகள் மற்றும் ஒரு தாய்மாா்கள் பாலூட்டும் அறையை கொண்டு, காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்கும். இதில் பகுதி நேர முறையில் இரண்டு பணியாளா்கள் மற்றும் தூய்மைப் பணியாளா்கள் பணிபுரிவா்.

இதே போன்று, பெருநகர சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து பொதுக்கழிப்பிடங்களையும் பராமரிக்க விருப்பமுள்ள நிறுவனங்கள் மாநகராட்சியின் ஜ்ஜ்ஜ்.ஸ்ரீட்ங்ய்ய்ஹண்ஸ்ரீா்ழ்ல்ா்ழ்ஹற்ண்ா்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் பாா்த்து தங்களது விருப்பத்துக்கேற்ற கழிப்பறைகளை தோ்ந்தெடுத்துக் கொண்டு பராமரிக்கலாம் என்றாா்.

நிகழ்ச்சியில் துணை ஆணையா் பி.குமாரவேல் பாண்டியன், தலைமை பொறியாளா் எஸ். ராஜேந்திரன், மண்டல அலுவலா் பரந்தாமன், செயற்பொறியாளா் முருகன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com