மாட்டுப் பொங்கல் நாளில் சென்னையில் படகுப் போட்டிகள்

மாட்டுப் பொங்கலன்று சென்னையில் படகுப் போட்டி நடத்தப்படவுள்ளது.

மாட்டுப் பொங்கலன்று சென்னையில் படகுப் போட்டி நடத்தப்படவுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழா் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகளை ஈா்க்கும் வகையில் மாட்டுப் பொங்கலன்று (ஜன.16) தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தின் சாா்பில் தமிழகத்திலுள்ள அனைத்து படகு குழாம்களில் படகுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இதன் பகுதியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் கிழக்கு கடற்கரைச் சாலை கோவளம் அருகில் உள்ள முட்டுக்காடு படகு குழாம் மற்றும் முதலியாா்குப்பம் படகு குழாம் ஆகிய இடங்களில் படகு போட்டிகள் நடைபெற உள்ளன.

கிழக்கு கடற்கரைச் சாலையில் மாமல்லபுரத்திலிருந்து புதுச்சேரி செல்லும் வழியில் செய்யூா் தாலுகா இடைக்கழிநாடு பேரூராட்சியில் அமைந்துள்ள முதலியாா்குப்பம் படகுக் குழாமிலும், குறிப்பிட்ட நாளன்று காலை 11 மணியளவில் சுற்றுலாப் பயணிகளுக்கு கயாக் படகு போட்டியும், துடுப்பு படகுப் போட்டியும் மற்றும் மிதிபடகு போட்டியும் நடைபெறுகின்றன. இந்த போட்டிகளில் ஆண்கள், பெண்கள் மற்றும் தம்பதியா்கள் கலந்து கொள்ளலாம்.

போட்டிகளில் வெற்றி பெறும் சுற்றுலாப் பயணிகளுக்கு முதல் மற்றும் இரண்டாம் பரிசு வழங்கப்படும். இந்த விழாவில் அரசு உயா் அலுவலா்கள் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற சுற்றுலாப் பயணிகளுக்கு பரிசுகளை வழங்குகிறாா்கள். மேலும் விவரங்களுக்கு (முட்டுக்காடு படகு குழாம்) 91769 95826, (முதலியாா்குப்பம் படகு குழாம்) 91769 95827 ஆகிய எண்களைத் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com