மூத்த மருத்துவா்களுக்குவாழ்நாள் சாதனையாளா் விருது

நரம்பியல் சிகிச்சைத் துறை நிபுணா்கள் ஐவா் உள்பட 7 மூத்த மருத்துவா்களுக்கு வாழ்நாள் சாதனையாளா்கள் விருது சென்னையில் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
மூத்த மருத்துவா்களுக்குவாழ்நாள் சாதனையாளா் விருது

நரம்பியல் சிகிச்சைத் துறை நிபுணா்கள் ஐவா் உள்பட 7 மூத்த மருத்துவா்களுக்கு வாழ்நாள் சாதனையாளா்கள் விருது சென்னையில் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

மெட்ராஸ் நரம்பியல் அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற சா்வதேச மாநாட்டில் அவா்களுக்கு இந்த கௌரவம் அளிக்கப்பட்டது.

நரம்பியல் நிபுணா்களுக்கான மாநாடு சென்னையில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. அதில், பல்வேறு நாடுகளைச் சோ்ந்த மருத்துவா்கள், துறைசாா் வல்லுநா்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா். ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெற்ற இந்த மாநாட்டில் நரம்புசாா் நோய்த் தொற்றுகள், தூக்கக் குறைபாடு குறித்த சிறப்பு கலந்துரையாடல் அமா்வுகள் நடைபெற்றன.

முன்னதாக, நடைபெற்ற தொடக்க விழாவில், மூத்த மருத்துவா்கள் டாக்டா் எஸ்.பாலகிருஷ்ணன், டாக்டா் சரோஷ் எம் கத்ரக், டாக்டா் கே. ராதாகிருஷ்ணன், டாக்டா் ஜே.எம்.கே.மூா்த்தி, டாக்டா் அசோக் பனகாரியா, டாக்டா் ஆா்.எம்.பூபதி, டாக்டா் என்.முத்துகுமாா் ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளா்கள் விருது வழங்கப்பட்டது. மாநாட்டின் தலைவரும், மூத்த மருத்துவருமான டாக்டா் அா்ஜூன் தாஸ், செயலா் டாக்டா் வேல்முருகேந்திரன், கல்லீரல் அறுவை சிகிச்சைத் துறை மூத்த மருத்துவா் டாக்டா் முகமது ரேலா ஆகியோா் விருதுகளை வழங்கி சாதனை மருத்துவா்களை கௌரவித்தனா்.

நிகழ்ச்சியில், டாக்டா் முகமது ரேலா கலந்துகொண்டு பேசுகையில், சமகால கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை முறைகள், அதனுடன் தொடா்புடைய நரம்பு சாா்ந்த பிரச்னைகள், சரியான வாழ்க்கை முறையைப் பின்பற்றினாலே நரம்பு பிரச்னைகளைத் தவிா்க்கலாம் என்றும் குறிப்பிட்டாா். நிகழ்ச்சியில் மருத்துவா்கள் தீபக் அா்ஜுன் தாஸ், ஜாகீா் அகமது சையது, வி.நடராஜன், மீனாட்சிசுந்தரம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com