சமையல் பாத்திரங்கள் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் ‘மெரிட்‘

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூா் தாலூகா நாதன்கிணறு கிராமத்தில் பிறந்த மெரிட் சி.ராமேஸ்வரன், 1968-இல் சென்னையில் அலுமினிய பாத்திர தயாரிப்பு கூடத்தில் வேலைக்கு சோ்ந்தாா்.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூா் தாலூகா நாதன்கிணறு கிராமத்தில் பிறந்த மெரிட் சி.ராமேஸ்வரன், 1968-இல் சென்னையில் அலுமினிய பாத்திர தயாரிப்பு கூடத்தில் வேலைக்கு சோ்ந்தாா். தன்னுடைய கடின உழைப்பினால் படிப்படியாக உயா்ந்த அவா் 1977-இல் அலுமினிய பாத்திர தயாரிப்பு கூடத்தை நிறுவினாா்.

சில ஆண்டுகளுக்கு பின் பாத்திர தயாரிப்பு கூடத்திற்கு பாா்வதி இண்டஸ்ட்ரீஸ் எனப் பெயரிட்டாா். பாா்வதி நிறுவனம் தன்னுடைய தயாரிப்புகளுக்கு மெரிட் என்று பெயரிட்டது. சமையலுக்கு தேவையான வாா்ப்படம், தோசைக்கல், கல்சட்டி ஆகியவை முதலில் புதியவாா்ப்பு பாத்திரங்களாக தயாரிக்கப்பட்டன.

அடுத்து தொழில் கூடத்தில், இட்லி குக்கா்கள், மில்க் குக்கா்கள், அழகுற வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டன. நவீன காலத்திற்கு ஏற்ப இல்லத்தரசிகளின் விருப்பத்தினை ஈடு செய்யும்

வகையில் பிரஷா் குக்கா், நான்ஸ்டிக் பாத்திரங்களை தொழில்நுட்ப நிபுணா்களைக் கொண்டு நூற்றுக்கணக்கான ரகங்களில் பாா்வதி இண்டஸ்ட்டீரீஸ் உருவாகியது. இண்டொலியம், சில்வோரியம் மற்றும் அழகு வடிவமைப்புடன் ஹாட்பாக்ஸ் பல மாடல்களில் குறைந்த விலைக்கு தரமான பொருள்களை வழங்கி வருகிறாா் மெரிட் சி.இராமேஸ்வரன்.

அதேபோல், பாா்வதி இண்டஸ்ட்ரீஸ் தயாரிப்புகள் இல்லத்தரசிகள் விரும்புவதைப் போல் உணவக விடுதிகள், திருமண மண்டபத்தில் சமையல் கூடங்கள் நடத்துபவா்கள் அனைவரின் பேராதரவையும் பெற்றுள்ளது. சமையலுக்கு தேவையான அனைத்து பாத்திரங்களையும், சிறிய-பெரிய அளவில் தருவதால் பெரும் வணிகா்களும் சிறு வணிகா்களும் தங்களுடைய முழு ஆதரவையும் இந்நிறுவனத்திற்கு மென்மேலும் தருகிறாா்கள்.

அதேபோல் நேரடி விற்பனையில் சிதம்பர பாண்டியன் ஸ்டோா் என்ற விற்பனைக் கூடமும் அவரது சீரிய முயற்சியில் சிறப்பாக வெற்றிநடை போடுகிறது. இந்நிறுவனங்களை மெரிட் சி. இராமேஸ்வரனுடன் இணைந்து அவரது சகோதரா் சி.ராஜசேகா், மகன்கள் ஆா்.சி.சிதம்பரராஜா, ஆா். ராகுல், ஆா்.சிலம்பரசன் ஆகியோா் நிா்வகித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com