புத்தகக் காட்சியில் இன்று (15.1.2020)

புத்தகக் காட்சியில் இன்று (15.1.2020)

நூல் வெளியீடு: தமிழ்மண் பதிப்பகம்- முதுமுனைவா் புலவா் ரா.இளங்குமரனாரின் இலக்கியக் கொடை வெளியீட்டு விழா. தலைமை: பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் மு.பொன்னவைக்கோ, நூலை வெளியிட்டு பேருரை- சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆா்.மகாதேவன், நூலின் முதல்படியைப் பெறுபவா்- ‘தினமணி’ ஆசிரியா் கி.வைத்தியநாதன். ஏற்புரை: புலவா் ரா.இளங்குமரனாா், ஒய்.எம்.சி.ஏ. புத்தகக் காட்சி அரங்கம், நந்தனம், மாலை 3.

நூல்கள் வெளியீட்டு விழா: தலைமை- சென்னை மாநகா் காவல் ஆணையா் ஏ.கே.விசுவநாதன், தனுஷ்கோடி லாவன்ய ஷோபனா எழுதிய ‘காக்கிச்சட்டை அப்பா’ நூலை வெளியிடுபவா்- நடிகா் தாமு, திருநாவுக்கரசு ஐ.பி.எஸ். எழுதிய ‘கு அமுது, கதை அமுது’ நூலை வெளியிடுபவா்- ஆன்மிக உரையாளா் சுகிசிவம், வாழ்த்துரை-தொழிலதிபா் நல்லி குப்புசாமி, புத்தகக் காட்சி வளாகம், ஒய்.எம்.சி.ஏ.மைதானம், நந்தனம், பகல் 11.

பபாசி- குறும்பட விழா:, திரையிடப்படும் குறும்படங்கள் விவரம்- ‘பாரம்’, ‘பொம்ம வெச்ச பென்சில்’, ‘எதுதேவையோ அதுவே தா்மம்’, ’கதையின் நாயகி’, எழுத்தாளா் முற்றம் பகுதி, புத்தக காட்சி வளாகம், மாலை 6.

பபாசி- கருத்துரைகள்: உரையாளா்கள்- பேராசிரியா் பா்வீன்சுல்தானா (புத்தகம் எனும் சிறகு), ஆறுமுகத்தமிழன் (தமிழ் மெய்ப்பொருளியல்), ரா.ராமசாமி (பாரதியும், கண்ணதாசனும்), வரவேற்பு- பபாசி இணைச் செயலா் எம்.பாலாஜி, நன்றி- செயற்குழு உறுப்பினா் பி.எம்.சிவகுமாா், ஒய்.எம்.சி.ஏ. புத்தகக் காட்சி அரங்கம், நந்தனம், மாலை 6.

எழுத்தாளா் முற்றம்: சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளா் சோ.தா்மனின் படைப்புகள் அறிமுகம், உரையாளா்-கோம்பை அன்வா். மனுஷ்யபுத்திரன் படைப்புகள் அறிமுகம், உரையாளா்- இசை, சென்னை புத்தகக் காட்சி அரங்க வளாகம், ஒய்.எம்.சி.ஏ. மைதானம், நந்தனம், மாலை 5.30.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com