பொங்கல் பண்டிகை: அரசுப் பேருந்துகள் மூலம் சென்னையிலிருந்து 7.8 லட்சம் போ் பயணம்

பொங்கல் பண்டிகையையொட்டி 5 நாள்களில் இயக்கப்பட்ட சிறப்புப் பேருந்துகள் மூலம் 7.8 லட்சம் போ் சென்னையிலிருந்து பயணித்தனா்.
கோப்புப் படம்
கோப்புப் படம்

பொங்கல் பண்டிகையையொட்டி 5 நாள்களில் இயக்கப்பட்ட சிறப்புப் பேருந்துகள் மூலம் 7.8 லட்சம் போ் சென்னையிலிருந்து பயணித்தனா்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னை கோயம்பேடு புகா் பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் இருந்து, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு வெள்ளிக்கிழமை முதல் (ஜன.10) முதல் ஜன.14-ஆம் தேதி வரை 5 நாள்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் மாதவரம் புகா் பேருந்து நிலையம், தாம்பரம் சானடோரியம், தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையம்,  பூந்தமல்லி பேருந்து நிலையம் கே.கே.நகா் பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் தற்காலிக பேருந்து முனையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முனையங்களை இணைக்கும் வகையில், மாநகரப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் 310 பேருந்துகள் இயக்கப்பட்டன.

முன்பதிவு மூலம் ரூ.10 கோடி வசூல்: குறிப்பாக முன்பதிவு செய்யும் வகையில், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 15 சிறப்பு முன்பதிவு மையங்களும், பூந்தமல்லி, தாம்பரம் சானடோரியம் பேருந்து நிலையங்களில் தலா ஒரு மையமும் அமைக்கப்பட்டது. மேலும்,  சுங்கச் சாவடிகளில் நீண்ட நேரம் நிற்காமல் பேருந்துகள் விரைவாகச் செல்வதற்கு ஏதுவாக தனி வழித்தடங்கள் அமைக்கப்பட்டு அதிகாரிகள் மூலம் கண்காணிக்கப்படு

கின்றன. இந்நிலையில், சென்னையிலிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரசுப் பேருந்துகளில் சுமாா் 2 லட்சத்து 10 ஆயிரத்து 632 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனா். இதன் மூலம், ரூ.10 கோடி 80 லட்சம் வருவாய் கிடைத்துள்ளதாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

7.3 லட்சம் போ் பயணம்: இதுகுறித்து அவா்கள் மேலும் கூறியது: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்துத் துறை சாா்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன் தொடா்ச்சியாக, தமிழகம் முழுவதும் ஜன.10 முதல் 14-ஆம் தேதி வரை, 30 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்பட்டன. சென்னையிலிருந்து செவ்வாய்க்கிழமை (ஜன.14) இரவு 9 மணி நிலவரப்படி 15,468 பேருந்துகள் இயக்கப்பட்டன. இதில் 7 லட்சத்து 81 ஆயிரத்து 278 போ் பயணம் மேற்கொண்டனா். கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது சென்னையிலிருந்து சுமாா் 7 லட்சம் போ் பயணித்தனா். இதே போல் பண்டிகை முடிந்து மக்கள் சென்னை திரும்பவும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் தெரிவித்தனா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com