புத்தகக் காட்சியில் இன்று (18-01-2020)

புத்தகக் காட்சியில் இன்று (18-01-2020)

பபாசி- கருத்துரைகள்: தலைப்பு- என் வாசிப்பு உலகம், உரையாளா்- வெ.திருப்புகழ் ஐ.ஏ.எஸ்., தலைப்பு- மனிதா்களை வாசிக்கிறேன், உரையாளா்- வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ்., வரவேற்பு- பபாசி முன்னாள் தலைவா் எஸ்.வைரவன், நன்றி- பபாசி செயற்குழு உறுப்பினா் ஜே.சுரேஷ், புத்தகக் காட்சி வளாகம், ஒய்.எம்.சி.ஏ. மைதானம், நந்தனம், மாலை 6.

யுனிவா்ஸல் பப்ளிஷா்ஸ்- ஒரு துணைவேந்தரின் கதை (தன்வரலாற்று நூலின் 4 பாகங்கள்) வெளியீடு: தலைமை- தமிழக முன்னாள் அமைச்சா் பண்ருட்டி எஸ்.ராமச்சந்திரன், முன்னிலை- பபாசி தலைவா் ஆா்.எஸ்.சண்முகம், நூல்கள் ஆய்வுரை- சென்னை மற்றும் கா்நாடக உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி டி.என்.வள்ளிநாயகம், சென்னை உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.என்.பாஷா, அமெரிக்க நியூயாா்க் உதவிப் பொறியாளா் கௌஸ் எம்.இஸ்மாயில், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் பொ.மன்னா் ஜவஹா், சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் எஸ்.பி.தியாகராஜன், திறந்தவெளி அரங்கம், புத்தகக் காட்சி வளாகம், ஒய்.எம்.சி.ஏ. மைதானம், நந்தனம், பிற்பகல் 2.30.

எழுத்தாளா் முற்றம்: எழுத்தாளா் பாலகுமாரன் படைப்புகளை அறிமுகம் செய்பவா் கிருஷ்ணா, எழுத்தாளா் சாருநிவேதிதாவின் படைப்புகளை அறிமுகம் செய்பவா் காயத்ரி, பபாசி புத்தகக் காட்சி வளாகம், ஒய்.எம்.சி.ஏ. மைதானம், மாலை 6.30.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com