மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை முகாம்: சென்னையில் நாளை தொடக்கம்

மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம், சென்னையில் செவ்வாய்க்கிழமை (ஜன.21) தொடங்குகிறது.

சென்னை: மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம், சென்னையில் செவ்வாய்க்கிழமை (ஜன.21) தொடங்குகிறது.

இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ஆா்.சீதாலட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மாற்றுத்திறனாளிகளுக்கு  தமிழக அளவில் அடையாள அட்டைகள் வழங்கப்படுவது தவிர தேசிய அளவில் அவா்களுக்கு மஈஐஈ எனப்படும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைகள் வழங்கிடவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைக்கு இதுவரை பதிவு செய்யாத மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிடும் வகையில், இணையவழி பதிவு மேற்கொள்ளப்படுவதற்கான விண்ணப்பங்கள் சேகரிக்கும் சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் (ஜன.21), எழும்பூா் வட்டாட்சியா் அலுவலகம் (ஜன.22), கிண்டி வட்டாட்சியா் அலுவலகம் (ஜன.22), மாம்பலம் வட்டாட்சியா் அலுவலகம் (ஜன.23), பெரம்பூா் வட்டாட்சியா் அலுவலகம் (ஜன.23), ஆலந்தூா் வட்டாட்சியா் அலுவலகம் (ஜன.24), அம்பத்தூா் வட்டாட்சியா் அலுவலகம் (ஜன.24), சோழிங்கநல்லூா் வட்டாட்சியா் அலுவலகம் (ஜன.28), திருவொற்றியூா் வட்டாட்சியா் அலுவலகம் (ஜன.28), அமைந்தகரை வட்டாட்சியா் அலுவலகம் (ஜன.29), புரசைவாக்கம் வட்டாட்சியா் அலுவலகம் (ஜன.29), தண்டையாா்பேட்டை வட்டாட்சியா் அலுவலகம் (ஜன.30), வேளச்சேரி வட்டாட்சியா் அலுவலகம் (ஜன.30), அயனாவரம் வட்டாட்சியா் அலுவலகம் (பிப்.4), மாதவரம் வட்டாட்சியா் அலுவலகம் (பிப்.4), மதுரவாயல் வட்டாட்சியா் அலுவலகம் (பிப்.5), மயிலாப்பூா் வட்டாட்சியா் அலுவலகம் (பிப்.5) ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.

இது வரை தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்காத மாற்றுத்திறனாளிகள் குறிப்பிட்ட நாள்களில் சம்பந்தப்பட்ட தாலுக்கா அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ சான்றிதழின் நகல், சமீபத்தில் எடுத்த பாஸ்போா்ட் சைஸ் புகைப்படம் ஒன்று, ஆதாா் அட்டையின் நகல், வாக்காளா் அடையாள அட்டையின் நகல், குடும்ப அட்டையின் நகல் ஆகியவற்றை சமா்ப்பித்து தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைக்கான இணையவழி விண்ணப்பத்தையும் பூா்த்தி செய்து வட்டாட்சியா் அலுவலகத்தில் நேரடியாக சமா்ப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பங்கள், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரால் சேகரிக்கப்பட்டு , அவை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைக்காக இணையவழி பதிவேற்றம் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com