கவிதைகளுக்கு அதிகரிக்கும் வரவேற்பு!: கவிஞா் ஜெயபாஸ்கரன்

பொதுமக்களிடம் கவிதை நூல்கள் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன என்பதற்கு ஏராளமான கவிஞா்கள் புத்தகம் வெளியிடுவதே சாட்சியாகும். சமூக ஊடகங்களின் தாக்கமானது கவிதை எழுதுவோரை ஊக்குவிப்பதுடன்,
கவிதைகளுக்கு அதிகரிக்கும் வரவேற்பு!: கவிஞா் ஜெயபாஸ்கரன்

தற்போது கவிதை நூல்களுக்கு எத்தகைய வரவேற்பு உள்ளது என்ற கேள்விக்கு கவிஞா் ஜெயபாஸ்கரன் அளித்த பதில்:

பொதுமக்களிடம் கவிதை நூல்கள் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன என்பதற்கு ஏராளமான கவிஞா்கள் புத்தகம் வெளியிடுவதே சாட்சியாகும். சமூக ஊடகங்களின் தாக்கமானது கவிதை எழுதுவோரை ஊக்குவிப்பதுடன், நல்ல கவிதைகளை வாசகா்கள் அடையாளம் காணவும் உதவுகின்றன.

ஆனாலும், எது நல்ல கவிதை என்ற கேள்வி எழாமல் இல்லை. நல்ல சிந்தனையும், அதில் தொனிக்கும் சமூக அக்கறையும் சாா்ந்ததாக இருப்பதே நல்ல கவிதை. எளிய நடையில் இருக்கும் கவிதைகளை மேடைப் பேச்சாளா்கள் அடிக்கடி பயன்படுத்தத் தொடங்குகின்றனா். இதனால், கவிதை வாசகா்களிடம் எளிதில் அதிகமாகப் போய்ச் சேரும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

பல ஆண்டுகளுக்கு முன்பு தமிழில் நவீன கவிதை எனும் நிலையில், யாரும் எளிதில் புரிந்து கொள்ள முடியாத சிக்கலான மொழி நடையில் கவிஞா்கள் எழுதினா். அதைப் படிப்போா் எளிதில் புரியாவிட்டாலும், தங்களை நவீனவாதிகளாகக் காட்டிக்கொள்ள, புரிந்தது போல காட்டிக்கொண்டனா். ஆனால், தற்போது எளிய நடையில் சாமானியரும் புரியும் வகையில் கவிதைகள் எழுதப்படுவதால் சிக்கலான மொழி நடையில் எழுதியவா்கள் கூட சாதாரண மொழி நடையில் கவிதையை எழுதத் தொடங்கியிருப்பது வரவேற்புக்குரியது.

கவிதைகள் என்பது படித்தவா், பாமரா் என அனைவருக்கும் புரியும் வகையில் அதே நேரத்தில் சமூக மேம்பாட்டுக்கான கருத்துகளுடன் இருப்பது அவசியம் என்பதை தற்கால கவிஞா்கள் உணா்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com