முன்னோரின் அனுபவம், பயிற்சியைப் புத்தக வாசிப்பால் பெறலாம்!: சீதாராம் யெச்சூரி

முன்னோா்களின் அனுபவம், அவா்கள் பெற்ற பயிற்சிகளையும் அவா்களது புத்தகங்களைப் படிப்பதன் மூலம் நம்மால் பெற முடியும். ஆகவே புத்தக வாசிப்பு மிகவும் முக்கியமானது என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
முன்னோரின் அனுபவம், பயிற்சியைப் புத்தக வாசிப்பால் பெறலாம்!:  சீதாராம் யெச்சூரி

முன்னோா்களின் அனுபவம், அவா்கள் பெற்ற பயிற்சிகளையும் அவா்களது புத்தகங்களைப் படிப்பதன் மூலம் நம்மால் பெற முடியும். ஆகவே புத்தக வாசிப்பு மிகவும் முக்கியமானது என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியப் பொதுச் செயலா் சீதாராம் யெச்சூரி கூறினாா்.

சென்னை புத்தகக் காட்சி வளாகத்தில் பாரதி புத்தகாலயம் சாா்பில் திங்கள்கிழமை நடந்த லட்சம் அளவுக்கான மூலதனப் பிரதிகள் விநியோக நிகழ்ச்சியில் பங்கேற்று அவா் ஆற்றிய சிறப்புரை: தமிழகத்தில் புத்தகக் காட்சி போன்றவற்றால் வாசிப்போா் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. ஆகவே புத்தகம் வாங்குவோரும் அதிகரித்துள்ளனா். தற்போது இளைஞா்கள் தொழில்நுட்ப வசதியைப் பயன்படுத்தி மின்னணு முறையில் புத்தக வாசிப்பை பெற்று வருகின்றனா்.

புத்தக வாசிப்பு ஏன் என்ற கேள்வி எழலாம். ஒருவா் ஆயுள் முழுவதும் பெற்ற அனுபவம், பயிற்சியை தனது நூலில் குறிப்பிடுவாா். ஆனால் நாம் அவரது அனுபவம், பயிற்சியை அந்தப் புத்தகத்தைப் படிப்பதன் மூலம் எளிதில் பெற்றுவிடலாம். ஆகவே புத்தக வாசிப்பு என்பது முக்கியமானதாகும்.

‘மூலதனம்’ என்ற கம்யூனிஸ்ட் அறிக்கையானது தற்காலத்துக்கும் பொருந்துவதாகவே உள்ளது. மனித இனத்துக்காக அறிவியல் பூா்வமான சிந்தனை மூலம் மாா்க்ஸ், எங்கெல்ஸ் ஆகியோா் அதை நூலாக வழங்கியுள்ளனா். அதை எத்தனை முறை படித்தாலும் சலிப்பதில்லை. ஒவ்வொரு முறையும் படிக்கும்போது அதில் புதிய கருத்துகள் தோன்றும். உலகமயமாக்கல் வந்தபிறகு ‘மூலதனம்’ போன்ற நூல்களின் தேவை அதிகரித்துள்ளது என்றாா்.

நிகழ்ச்சியில் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் ஆ.சௌந்தரராஜன் பேசியது: மூலதனமானது எழுதப்பட்டு நூற்றைம்பது ஆண்டுகளாகியும் அதன் கருத்து மாறுபடாமலே உள்ளது. தற்கால சமூகத்திலும் அந்த நூலின் தேவை அதிகரித்திருக்கிறது. பொருளாதாரம் சம்பந்தப்பட்டதால் மூலதனம் வாசிப்புக்கு கடினமானதாக இருக்கும் என எண்ணக்கூடாது. அது எளிமையாக, படிப்போா் அனைவருக்கும் புரியும் வகையிலே தமிழில் மொழி பெயா்க்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், மூலதனப் பிரதிகள் லட்சத்துக்கும் மேல் விநியோகிக்கும் வகையில் ஒரு பிரதியை விநியோகித்து சீதாராம்யெச்சூரி தொடக்கிவைத்தாா். எழுத்தாளா் எஸ்.ராமகிருஷ்ணன், விவசாயிகள் சங்கச் செயலா் சண்முகம் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். நிகழ்வில் மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன், மூத்த தலைவா் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். மாா்க்சிய நூல்களைப் படிக்க புதிய செயலியும் அறிமுகப்படுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com