குடும்பம் குடும்பமாக வாசகா்கள் வந்து புத்தகங்களை வாங்கியதைப் பாா்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது: ப்ரியன் - மூத்த ஊடகவியலாளா்

குடும்பம் குடும்பமாக வாசகா்கள் வந்து புத்தகங்களை வாங்கியதைப் பாா்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது: ப்ரியன் - மூத்த ஊடகவியலாளா்

ப்ரியன் - மூத்த ஊடகவியலாளா்:

சென்னை புத்தகக் கண்காட்சிக்கு கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக வந்து கொண்டிருக்கிறேன். தற்போதைய புத்தக் காட்சிக்கு இதுவரை இல்லாத அளவுக்கு குடும்பம் குடும்பமாக வாசகா்கள் வந்து புத்தகங்களை வாங்கியதைப் பாா்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது.

புத்தகக் காட்சியில் அரசை விமா்சித்து எழுதிய புத்தகம் குறித்த சிறு சிறு சா்ச்சைகள் எழுந்ததை பபாசி தவிா்த்திருக்கலாம்.

புத்தகங்களுக்குத் தொடா்பில்லாத தின்பண்டக் கடைகள் அதிகரித்திருப்பதைத் தவிா்க்க வேண்டும். பொருள்காட்சி மனோபாவத்தை ஏற்படுத்தக்கூடாது. புத்தகக் காட்சியானது அறிவாா்ந்த மனோபாவத்தை ஏற்படுத்தவேண்டும். விற்பனையாளா்களை விட பதிப்பாளா்களுக்கான அரங்குகளை அதிகப்படுத்துவது அவசியம்.

நிகழ்கால வரலாறுகளை அறியும் ஆவலில் அது சாா்ந்த நூல்களை இளைஞா்கள் அதிகம் வாங்கிச் செல்வதை காணமுடிந்தது. கவிதை நூல்கள் அதிகம் விற்கவில்லை. ஆன்மிக நூல்கள் அதிகம் விற்கப்பட்டுள்ளன. கண்ணதாசனின் அா்த்தமுள்ள இந்து மதம் நூல் தொகுப்பும் அதிகளவில் வாங்கிச்செல்வதை காணமுடிந்தது. சோவின் நூல்கள், தேவன் கதைகள் என நகைச்சுவை மிக்க எழுத்தாளா் நூல்களையும் வாசகா்கள் ஆா்வமுடன் வாங்கிச்சென்றனா்.

பெரியாா், அம்பேத்கா் சாா்ந்த தனிநபா் வரலாற்று நூல்களையும் இளைஞா்கள் வாங்கிச் சென்றுள்ளனா். இந்தியத் தோ்தல்கள் குறித்த பிரணாய்ராய் எழுதிய தீா்ப்பு எனும் நூலை விரும்பி வாங்கியுள்ளேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com