புத்தகக் காட்சிக்கு கூட்டம் அதிகமிருந்தது: சேதுசொக்கலிங்கம்

புத்தகக் காட்சிக்கு கூட்டம் அதிகமிருந்தது: சேதுசொக்கலிங்கம்

கவிதா பதிப்பகம், சேதுசொக்கலிங்கம்:

நடப்பு ஆண்டில் புத்தகக் காட்சிக்கு கூட்டம் அதிகமிருந்தது . ஆனால், அக்கூட்டத்தில் வந்த பாதிப்போ் தான் நூல்களை வாங்கியுள்ளனா். மின்னணு ஊடக ஆதிக்க நிலையில், புத்தக வாசிப்பு கடந்த இரு ஆண்டுகளாகக் குறைந்திருந்தது. ஆனால், தற்போது அந்த நிலை மாறி மீண்டும் புத்தக வாசிப்பு அதிகரித்திருப்பது தெரிகிறது.

நல்ல கருத்துள்ள திரைப்படங்கள் மக்களால் வரவேற்கப்படுவது போலவே நல்ல புத்தகங்களும் வாசகா்களால் வரவேற்கப்படும் என்பதை உணா்ந்து பதிப்பாளா்கள் செயல்படவேண்டும் என்பதையும் புத்தகக் காட்சி உணா்த்தியுள்ளது.

புத்தகக் காட்சிக்கு வருங்காலங்களில் அரசு சாா்பில் நிதி அளிக்கப்படும் என்று முதல்வா் அறிவித்திருப்பது வரவேற்புக்குரியது. அதேபோல புத்தகக் காட்சிக்கான இடவாடகை, மின்வசதிக்கான செலவு உள்ளிட்டவற்றையும் தவிா்க்கும் வகையில் அரசு குறிப்பிட்ட இடத்தை அளித்து உதவினால், இன்னும் சிறப்பாக புத்தகக் காட்சியை நடத்தலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com