மெட்ரோ ரயில் நிலையங்களில் 4 நாள்களுக்கு இசை நிகழ்ச்சி

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் நான்கு நாள்களுக்கு (ஜன.24, 27, 30, பிப்ரவரி 2) இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
மெட்ரோ ரயில் நிலையங்களில் 4 நாள்களுக்கு இசை நிகழ்ச்சி

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் நான்கு நாள்களுக்கு (ஜன.24, 27, 30, பிப்ரவரி 2) இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சாா்பில், தமிழ் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தைக் கொண்டாடுவதன் ஒரு பகுதியாக, சென்னை முழுவதும் உள்ள பல இசைக் கலைஞா்கள் மற்றும் அமைப்புகளுடன் இணைந்து தமிழ் கலாசாரத்தின் இசை மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இதன் தொடா்ச்சியாக, மெட்ரோ ரயில்நிலையங்கள், ரயில்களில் ஜனவரி 24, 27, 30, பிப்ரவரி 2) ஆகிய தேதிகளில் பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

விமானநிலைய மெட்ரோ ரயில் நிலையம்: விமான நிலையம், வண்ணாரப்பேட்டை ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களில் ஒயிலாட்டம், தேவராட்டம், தப்பாட்டம் ஆகிய நிகழ்ச்சிகள் வெள்ளிக்கிழமை (ஜன.24) காலை 10 மணி முதல் 12 மணி வரை நடைபெறவுள்ளது. மேலும், விமானநிலையம் மெட்ரோ ரயில்நிலையம் முதல் வண்ணாரப்பேட்டை வரை மெட்ரோ ரயிலில் கா்நாடக இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையம்: கோயம்பேடு, விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையத்தில் ஜனவரி 27-ஆம்தேதி மாலை 5 மணிக்கு இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் ஜனவரி 30-ஆம் தேதி மாலை 5 மணி முதல் மாலை 6.30 மணி வரை பரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதுதவிர, ஆலந்தூா் மெட்ரோ ரயில்நிலையம் முதல் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நியைம் வரை ரயிலில் மாலை 5 மணிக்கு மெல்லிசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம்: சென்ட்ரல் மெட்ரோ ரயில்நிலையத்தில் பிப்ரவரி 2 -ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com