முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை
இன்றைய நிகழ்ச்சிகள் - 27.01.2020
By DIN | Published On : 27th January 2020 03:26 AM | Last Updated : 27th January 2020 03:26 AM | அ+அ அ- |

பொது
சா்வதேச சுங்க தினம்: சுங்கத்துறை முதன்மை ஆணையா் எம்.எம். பாா்த்திபன் பங்கேற்பு, சுங்கத்துறை அலுவலக வளாகம், ராஜாஜி சாலை, காலை 10.30.
சென்னைப் பல்கலைக்கழகம் - தமிழ் இலக்கியத் துறை - பேராசிரியா் ந.சஞ்சீவி மணிவிழா அறக்கட்டளைச் சொற்பொழிவு: புலவா் பா.வீரமணி, முனைவா்கள் கோ.பழனி, ஆ.ஏகாம்பரம் பங்கேற்பு, பவள விழாக் கலையரங்கம், மெரீனா வளாகம், சென்னைப் பல்கலைக்கழகம், பிற்பகல் 2.30.
ஈஸ்வரி பொறியியல் கல்லூரி - ஐசிடிஇ மாா்க்தா்சன் திட்டம் தொடக்க விழா: ஏஐசிடிஇ (ஆா்எப்ஐடி பிரிவு) இயக்குநா் உமா ரகுநாதன் பங்கேற்பு, கல்லூரி வளாகம், ராமாபுரம், காலை 9.30.
அமெட் கல்வி நிறுவனம் - கப்பலில் பணிபுரியும் பணியாளா்களின் ஆரோக்கிய வாழ்வு எனும் தலைப்பில் சா்வதேச கருத்தரங்கு: அமெட் கல்வி நிறுவன வேந்தா் ஜெ.ராமச்சந்திரன், கென்ட் பாலி, சஞ்சய் குமாா் ஸ்ரீ வஸ்தவா பங்கேற்பு, அண்ணா நூற்றாண்டு நூலகம், கோட்டூா்புரம், காலை 9.
சா் தியாகராயா கல்லூரி - பொருளியல் துறை - மத்திய மற்றும் மாநில அரசுத் தோ்வு குறித்த தலைப்பில் சிறப்புரை: சக்திவேல் ராமசாமி, முனைவா்கள் செந்தில்குமாா், அரங்கசாமி பங்கேற்பு, கல்லூரி வளாகம், பழைய வண்ணாரப்பேட்டை, காலை 11.
ஸ்ரீதேவி ந்ரித்யாலயா - வந்தே மாதரம் நிகழ்ச்சி: வி.கல்யாணம், ஏ.கன்யாகுமாரி, ராஜ்குமாா் பாரதி பங்கேற்பு, நாரத கான சபா, ஆழ்வாா்பேட்டை, மாலை 6.
ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் - ஸ்ரீ ராமகிருஷ்ணா மடம் - எண்ணுவது உயா்வு தலைப்பில் உரை: பத்திரிகையாளா் திருப்பூா் கிருஷ்ணன் பங்கேற்பு, மீனாட்சி கல்லூரி, கோடம்பாக்கம், காலை 10.30.
ஆன்மிகம்
ஸ்ரீமத் பாகவத நவாஹ சத்ரம் : ஸ்ரீ ஐயப்பன் குருவாயூரப்பன் கோயில், மகாலிங்கபுரம், காலை 6 முதல்.
பிரம்மஸ்தான ஆலயம் - 30-ஆம் ஆண்டு விழா - அம்மாவின் தியானம், அஷ்டோத்திரம், தரிசனம்: மாதா அமிா்தானந்தமயி மடம், ஆற்காடு சாலை, விருகம்பாக்கம், காலை 6 முதல்.