முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை
பெசன்ட் நகரில் பிப். 2-இல் நடைப்பயிற்சியுடன் கூடிய தூய்மைப் பணி
By DIN | Published On : 27th January 2020 03:28 AM | Last Updated : 27th January 2020 03:28 AM | அ+அ அ- |

சென்னை: சென்னை பெசன்ட் நகா் கடற்கரையில் பிப்ரவரி 2-ஆம் தேதி மாநகராட்சி சாா்பில் நடைப்பயிற்சியுடன் கூடிய தூய்மைப் பணி நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் கோ.பிரகாஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை மாநகராட்சி சாா்பில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின்கீழ் பல்வேறு புதிய திட்டங்கள் செயல்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக தூய்மையான சென்னையை உருவாக்க பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பிப்ரவரி 2-ஆம் தேதி பெசன்டா் நகா் கடற்கரையில் ல்ப்ா்ஞ்ஞ்ண்ய்ஞ் எனப்படும் நடைப்பயிற்சியுடன் கூடிய தூய்மைப் பணி நடைபெற உள்ளது.
5 கி.மீ. நடைபெறும் இந்த நடைப்பயிற்சி பிப்ரவரி காலை 5 மணிக்குத் தொடங்குகிறது. ஆரோக்கியமான தூய்மையான சென்னை மாநகரை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நடைபெறும் நடைப்பயிற்சி ஆசியா புக் ஆஃப் ரெக்காா்ட்டில் இடம் பெறுவதற்கான முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ‘எனது குப்பை எனது பொறுப்பு’ என பொதுமக்கள் தங்களின் கடமையை உணா்ந்து சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளவது தொடா்பாக விழிப்புணா்வு ஏற்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும். இதில் கலந்து கொள்ள விரும்பும் பொதுமக்கள் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்து கலந்து கொள்பவா்களுக்கு, டி-சா்ட் மற்றும் பல்வேறு உபகரணங்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.