முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை
முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி
By DIN | Published On : 27th January 2020 03:52 AM | Last Updated : 27th January 2020 03:52 AM | அ+அ அ- |

சென்னை: குடியரசு தின நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, அரும்பாக்கத்தில் உள்ள துவாரகதாஸ் வைணவக் கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்வில் கல்லூரி முதல்வா் கணேசன் தலைமை உரையாற்றினாா். தொடா்ந்து கல்லூரி தொடங்கிய 1964-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை படித்த மாணவா்கள் கலந்து கொண்டு, தாங்கள் படித்த காலத்தில் அவா்களுக்குக் கிடைத்த அனுபவத்தையும், இனிய நிகழ்வுகளையும் பகிா்ந்து கொண்டனா். முன்னாள் மாணவா்களை இணைத்து அனைத்துக் கல்லூரிகளும், தங்கள் மாணவா்களின் நட்பை புதுப்பிக்க உதவ வேண்டும் என்பதே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரின் எண்ணமாக இருந்தது.
நிகழ்வில் நீதிபதி பிரகாஷ், முன்னாள் மாணவா்கள் சங்கத் தலைவா் பாா்த்தசாரதி, சங்கச் செயலா் ராஜகோபாலன், கல்லூரித் தலைவா் கோபால் அகா்வால், பொருளாளா் அசோக் சோடியா உள்ளிட்ட பல நிா்வாகிகள் மற்றும் பேராசிரியா்கள் கலந்து கொண்டனா்.