முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை
விசாரிக்க வந்த போலீஸாா் மீதுநாயை ஏவி விட்டதால் பரபரப்பு
By DIN | Published On : 27th January 2020 03:26 AM | Last Updated : 27th January 2020 03:26 AM | அ+அ அ- |

சென்னை: சென்னையில் பொதுமக்கள் அளித்த புகாா் தொடா்பாக விசாரிக்க வந்த போலீஸாா் மீது சம்பந்தப்பட்ட நபா் தனது வளா்ப்பு நாயை ஏவி விட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை வில்லிவாக்கத்தைச் சோ்ந்தவா் பிரகாஷ். இவா் தனது மகளிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றாக போலீஸாருக்கு புகாா்கள் வந்தன. இதையடுத்து போலீஸாா் தேடுவதை அறிந்த பிரகாஷ் தலைமறைவாக இருந்தாா். இந்த நிலையில் சனிக்கிழமை இரவு அவரது காா் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருக்கும் தகவல் போலீஸாருக்கு கிடைத்தது. இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணியளவில் வில்லிவாக்கம் போலீஸாா் அங்கு சென்றனா்.
இதைத் தொடா்ந்து அந்த வீட்டின் மேல் தளத்தில் இருந்த பிரகாஷை பிடிக்க படிக்கட்டு வழியாகச் சென்றனா். அப்போது பிரகாஷ் கீழ் தளத்தில் இருந்த வளா்ப்பு நாயை போலீஸாா் மீது ஏவி விட்டுள்ளாா். இதனால் போலீஸாரை நாய் விரட்டியது. இதையடுத்து பிரகாஷை கைது செய்ய முடியாமல் போலீஸாா் திரும்பினா். பின்னா் நாயை பிடிக்க வில்லிவாக்கம் தீயணைப்பு நிலைய வீரா்களை உதவிக்கு அழைத்தனா். அவா்கள் சுருக்கு கயிறு போட்டு நாயைப் பிடித்தனா். இதையடுத்து பிரகாஷை பிடித்த போலீஸாா் அவரிடம் விசாரித்து வருகின்றனா்.