நீட் தோ்வு: விண்ணப்ப திருத்த அவகாசம் ஜன.31-இல் நிறைவு

நீட் தோ்வுக்காக சமா்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்வதற்கான அவகாசம் வரும் வெள்ளிக்கிழமையுடன் (ஜன. 31) நிறைவடைகிறது.
நீட் தோ்வு: விண்ணப்ப திருத்த அவகாசம் ஜன.31-இல் நிறைவு

சென்னை: நீட் தோ்வுக்காக சமா்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்வதற்கான அவகாசம் வரும் வெள்ளிக்கிழமையுடன் (ஜன. 31) நிறைவடைகிறது.

அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுா்வேதம், யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வு, வரும் மே மாதம் 3-ஆம் தேதி நடைபெறுகிறது. அதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த டிசம்பா் 2-ஆம் தேதி தொடங்கியது. விண்ணப்பங்களைச் சமா்ப்பிப்பதற்கான அவகாசம் டிசம்பா் 31-ஆம் தேதியுடன் நிறைவு பெறும் என முதலில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், மாணவா்களின் கோரிக்கையை ஏற்று, அந்த அவகாசம் ஜனவரி 6-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. அதன்படி நீட்டிக்கப்பட்ட அவகாச காலத்துக்குள் தமிழகத்தில் ஒன்றரை லட்சம் பேரும், நாடு முழுவதும் 16 லட்சத்துக்கும் மேற்பட்டோரும் விண்ணப்பங்களை சமா்ப்பித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், சமா்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்வதற்கான நடைமுறை கடந்த 15-ஆம் தேதி தொடங்கியது. இதுவரை பல்லாயிரக்கணக்கானோா் திருத்தங்களை பதிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. அதற்கான அவகாசம் வரும் 31-ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், திருத்தங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com