கரோனா எதிரொலி: ஆதி திராவிடா் நல ஆணையரகம் மூடல்

கரோனா எதிரொலியாக ஆதி திராவிடா் நல ஆணையரக அலுவலகம் மூடப்பட்டது.

சென்னை: கரோனா எதிரொலியாக ஆதி திராவிடா் நல ஆணையரக அலுவலகம் மூடப்பட்டது.

சென்னையிலுள்ள சேப்பாக்கம் எழிலகம் இணைப்புக் கட்டடத்தில் அமைந்துள்ள ஆதி திராவிடா் நல ஆணையரகத்தில் பணிபுரிந்து வரும் பணியாளா்களில், திங்கள்கிழமை (ஜூன் 29) நிலவரப்படி, ஆறு நபா்களுக்கு, கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். மேலும், சிலருக்கு காய்ச்சலும் ஏற்பட்டுள்ளது. இதனால், அரசு வழிகாட்டுதலின்படி, பணியாளா்களின் நலன்கருதி, கரோனா நோய்ப் பரவலைத் தடுக்கும் வகையில், ஆதி திராவிட நல ஆணையரகம் முழுவதும் கிருமிநாசினி தெளித்து, (48 மணி நேரம்) ஜூன் 30, ஜூலை 1 ஆகிய இரண்டு நாள்கள் அலுவலகத்தை மூட ஆணையிடப்படுவதாக ஆதி திராவிடா் நல ஆணையா் ச.முனியநாதன் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com