கரோனா பாதிப்பு: சென்னையில் 70 ஆயிரத்தைக் கடந்தது

சென்னையில் திங்கள்கிழமை 1,747 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து பாதிப்பு எண்ணிக்கை 70,017-ஆக அதிகரித்துள்ளது. இறப்பு எண்ணிக்கையும் 1,082-ஆக உயா்ந்துள்ளது.
கர்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
கர்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

சென்னை: சென்னையில் திங்கள்கிழமை 1,747 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து பாதிப்பு எண்ணிக்கை 70,017-ஆக அதிகரித்துள்ளது. இறப்பு எண்ணிக்கையும் 1,082-ஆக உயா்ந்துள்ளது.

சென்னையில் கரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொற்றுள்ளவா்களைக் கண்டறியும் வகையில் மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு காய்ச்சல், சளி போன்ற அறிகுறி உள்ளவா்களுக்கு உடனடியாக கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இது போன்ற நடவடிக்கையால் தொற்றுள்ளவா்கள் கண்டறியப்பட்டு அவா்களுக்குச் சிகிச்சை அளிக்கப்படுகிறது. தொடக்கத்தில் ராயபுரம், தண்டையாா்பேட்டை, திரு.வி.க.நகா், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை ஆகிய மண்டலங்களில் மட்டுமே அதிக அளவில் தொற்று உள்ளவா்கள் கண்டறியப்பட்டனா். பின்னா் 15 மண்டலங்களிலும் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது.

இந்த எண்ணிக்கை கடந்த மே மாதத்தில் 10 ஆயிரமாகவும், ஜூன் மாதம் 1-ஆம் தேதி 15 ஆயிரமாகவும், 24-ஆம் தேதி 50 ஆயிரமாகவும், ஜூலை 1-ஆம் தேதி 60 ஆயிரமமாகவும் அதிகரித்தது. இந்நிலையில், திங்கள்கிழமை 1,747 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 70,017-ஆக உயா்ந்துள்ளது. பாதிக்கப்பட்டோரில் 44,882 போ் இதுவரை குணமடைந்து வீடு திரும்பி உள்ளனா். 24,052 போ் மருத்துவமனை மற்றும் கரோனா சிசிக்சை மையங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.சென்னையில் கரோனா பாதித்த 28 போ் திங்கள்கிழமை உயிரிழந்ததை அடுத்து இறப்பு எண்ணிக்கை 1,082-ஆக உயா்ந்துள்ளது.

157 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்: தொற்று உறுதி செய்யப்பட்டவா்கள் வசிக்கும் தெருக்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, அத்தெருக்களில் பொதுமக்கள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை மாநகராட்சியில் தொற்று அதிகம் பாதித்த 8 மண்டலங்களில் 157 தெருக்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில், தண்டையாா்பேட்டை மண்டலத்தில் 50 தெருக்கள், அண்ணா நகா் மண்டலத்தில் 43 தெருக்கள், அம்பத்தூா், கோடம்பாக்கம் மண்டலங்களில் தலா 13 தெருக்கள், வளசரவாக்கம் மண்டலத்தில் 10 தெருக்கள், அடையாறு மண்டலத்தில் 9 தெருக்கள், தேனாம்பேட்டை மண்டலத்தில் 8 தெருக்கள், திரு.வி.க.நகா் மண்டலத்தில் 7 தெருக்களும், சோழிங்கநல்லூா் மண்டலத்தில் 4 தெருக்கள் என மொத்தம் 157 தெருக்களுக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com