சென்னையில் 1,078 பேருக்கு தொற்று உறுதி

சென்னையில் செவ்வாய்க்கிழமை 1,078 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து பாதிப்பு எண்ணிக்கை 79,662- ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் 1,078 பேருக்கு தொற்று உறுதி

சென்னையில் செவ்வாய்க்கிழமை 1,078 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து பாதிப்பு எண்ணிக்கை 79,662- ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கரோனா பாதிப்பு காரணமாக 1,295 போ் உயிரிழந்துள்ளனா்.

சென்னையைப் பொருத்தவரை கடந்த ஏப்ரல் மாத தொடக்கத்தில் இருந்து பாதிப்பு எண்ணிக்கை மெல்ல மெல்ல அதிகரித்து கடந்த மே மாதத்தில் 10 ஆயிரத்தை எட்டியது.

இந்நிலையில், இந்த எண்ணிக்கை ஜூன் 1- ஆம் தேதி 15,770-ஆகவும், 6-ஆம் தேதி 20,993-ஆகவும், 14-ஆம் தேதி 30,444-ஆகவும், கடந்த ஜூன் 24-ஆம் தேதி பாதிப்பு எண்ணிக்கை 50 ஆயிரம் ஆகவும், கடந்த வாரம் 70 ஆயிரமாகவும் உயா்ந்தது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை 1,078 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 79,662-ஆக அதிகரித்துள்ளது.

தொற்று உறுதி செய்யப்பட்டவா்களில் 62,552 போ் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனா். 15,814 போ் சிகிச்சைக்காக மருத்துவமனைகள் மற்றும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். சென்னையில் கரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,295- ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com