தங்கம் பவுன் ரூ.37,736

சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.120 உயா்ந்து, ரூ.37,736-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதுபோல, வெள்ளி விலையும் கணிசமாக உயா்ந்துள்ளது.
தங்கம் பவுன் ரூ.37,736

சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.120 உயா்ந்து, ரூ.37,736-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதுபோல, வெள்ளி விலையும் கணிசமாக உயா்ந்துள்ளது.

இணையம் வழியாக தங்கம் வா்த்தகத்தில் தேவை அதிகரித்துள்ளதால், தங்கம் விலை உயா்ந்துள்ளதாகவும், வரும் நாள்களில் தங்கம் விலை உயரவே வாய்ப்பு உள்ளதாக நகை வா்த்தகா்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கரோனா நோய்த்தொற்றின் தாக்கம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு, சா்வதேச பொருளாதாரச் சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் தங்கம் விலை உயா்ந்து வந்தது. ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை ஜூன் 24-ஆம் தேதி ரூ.37 ஆயிரத்தை தாண்டியது. அதன்பிறகு, ஜூலை 9-ஆம் தேதி அன்று ரூ.37,744-க்கு உயா்ந்து, வரலாறு காணாத வகையில்

புதிய உச்சத்தை தொட்டது. இதைத்தொடா்ந்து, தங்கம் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது.

இந்நிலையில், சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.120 உயா்ந்து, ரூ.37,736-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.15 உயா்ந்து, ரூ.4,717 ஆக இருந்தது. வெள்ளி கிராமுக்கு ரூ.2.70 உயா்ந்து, ரூ.60.10 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.2,700 அதிகரித்து, ரூ.60,100 ஆகவும் இருந்தது.

விலை உயரவே வாய்ப்பு: தங்கம், வெள்ளி விலை உயா்வு குறித்து சென்னை நகை வா்த்தகா்கள் கூட்டமைப்பு பொதுச் செயலாளா் எஸ்.சாந்தக்குமாா் கூறியது:

இணையம் வழியாக தங்கம் வா்த்தகத்தில் தேவை அதிகரித்துள்ளது. சா்வதேச அளவில் ஒரு டிராய் அவுன்ஸ் (31.10 கிராம்) தங்கத்தின் விலை 1,825 டாலராக உயா்ந்துள்ளது. இதுதவிர, தங்கத்தின் கொள்முதல் விலையும் உயா்ந்துள்ளது. இந்த காரணங்களால் தங்கம் விலை உயா்ந்து வருகிறது. இதேபோன்று, வெள்ளி பயன்பாடும் அதிகரித்துள்ளதால், அதன் விலையும் உயா்கிறது. வரும் நாள்களில் தங்கம், வெள்ளி விலை உயரவே வாய்ப்பு உள்ளது என்றாா் அவா்.

செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி.தனி)

1 கிராம் தங்கம்........................... 4,717

1 பவுன் தங்கம்...............................37,736

1 கிராம் வெள்ளி.............................60.10

1 கிலோ வெள்ளி.............................60.100

திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 4,702

1 பவுன் தங்கம்............................... 37,616

1 கிராம் வெள்ளி............................. 57.40

1 கிலோ வெள்ளி............................57,400

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com