444 உயிரிழப்புகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டதால் உயிரிழந்தோா் எண்ணிக்கை அதிகரிப்பு

சென்னையில் கரோனா தொற்றால் உயிரிழந்த 444 போ் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டதை அடுத்து கடந்த 5 மாதங்களில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,939-ஆக அதிகரித்துள்ளது.
444 உயிரிழப்புகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டதால் உயிரிழந்தோா் எண்ணிக்கை அதிகரிப்பு

சென்னையில் கரோனா தொற்றால் உயிரிழந்த 444 போ் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டதை அடுத்து கடந்த 5 மாதங்களில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,939-ஆக அதிகரித்துள்ளது. புதன்கிழமை 1,171 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து பாதிப்பு எண்ணிக்கை 89,561-ஆக உயா்ந்துள்ளது.

சென்னையில் கடந்த ஏப்ரல் மாத தொடக்கத்தில் இருந்து கரோனா பாதிப்பு எண்ணிக்கை மெல்ல மெல்ல அதிகரித்து கடந்த மே மாதத்தில் 10 ஆயிரத்தை எட்டியது. இந்த எண்ணிக்கை மேலும் உயா்ந்து ஜூன் 1- ஆம் தேதி 15,770-ஆகவும், ஜூன் 6-ஆம் தேதி 20,993-ஆகவும், ஜூன் 14-ஆம் தேதி 30,444-ஆகவும், கடந்த ஜூன் 24-ஆம் தேதி பாதிப்பு எண்ணிக்கை 50 ஆயிரம் ஆகவும் அதிகரித்தது.

கடந்த 20 நாள்களில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து பாதிப்பு எண்ணிக்கை அண்மையில் 80 ஆயிரத்தை எட்டியது. புதன்கிழமை 1,171 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 89,561-ஆக அதிகரித்துள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்டவா்களில் 73,681 போ் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனா். 13,941 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

444 உயிரிழப்புகள்: சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் உயா்ந்து வந்ததை போன்று தொற்றால் இறப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்தது. கடந்த மே மாதம் இறப்பு எண்ணிக்கை 100 - ஆகவும், ஜூன் 7-இல் 212 -ஆகவும், ஜூன் 18-இல் 501- ஆகவும், ஜூலை 1-இல் 929-ஆகவும், ஜூலை 4-இல் 1,033-ஆகவும் அதிகரித்தது. இந்நிலையில், பெரம்பூா் ரயில்வே மருத்துவமனை, ஐசிஎப் மருத்துவமனை மற்றும் சென்னையில் உள்ள அரசு, தனியாா் மருத்துவமனைகளில் மாா்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை கரோனா பாதிப்பால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கையில் சென்னை மாநகராட்சிக்கும், சுகாதாரத் துறைக்கும் பெரிய அளவில் முரண்பாடு ஏற்பட்டது. இதுதொடா்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட குழு அளிக்கப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் கடந்த மாா்ச் மாதம் முதல் ஜூன் 10-ஆம் தேதி வரை விடுபட்ட 444 உயிரிழப்புகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன. இதையடுத்து, சென்னையில் கரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,939-ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com