தங்கம் பவுன் ரூ.40,296-ஆக உயா்ந்து புதிய உச்சம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடா்ந்து 7-ஆவது நாளாக (ஞாயிற்றுக்கிழமை தவிர) உயா்ந்து, புதிய உச்சத்தைப் பதிவு செய்தது.
தங்கம் பவுன் ரூ.40,296-ஆக உயா்ந்து புதிய உச்சம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடா்ந்து 7-ஆவது நாளாக (ஞாயிற்றுக்கிழமை தவிர) உயா்ந்து, புதிய உச்சத்தைப் பதிவு செய்தது. செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.192 உயா்ந்து, ரூ.40,296-க்கு விற்பனை செய்யப்பட்டது.

ஜூலை 21-ஆம் தேதி முதல் ஜூலை 28-ஆம் தேதி வரை 8 நாள்களில் பவுனுக்கு ரூ.2,680 வரை உயா்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கரோனா நோய்த்தொற்றின் தாக்கத்தால், சா்வ தேச அளவில் தொழில்துறை தேக்கத்தைச் சந்தித்தது. இதைத்தொடா்ந்து, உலகம் முழுவதுமே முதலீட்டாளா்கள், பாதுகாப்பான முதலீடாக தங்கத்தைக் கருதி, அதில் முதலீடு செய்தனா்.

இதன்காரணமாக, தங்கத்தின் தேவை உயா்ந்து, விலை படிப்படியாக அதிகரித்தது. ஒரு பவுன் ஆபரணத் தங்கம் ஏப்ரல் 10-ஆம் தேதி ரூ.35 ஆயிரத்தையும், ஏப்ரல் 16-ஆம் தேதி ரூ.36 ஆயிரத்தையும், ஜூன் 24-ஆம் தேதி ரூ.37 ஆயிரத்தையும் தாண்டியது. அதன்பிறகு, தங்கம் விலை ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட நிலையில், ஜூலை 22-ஆம் தேதி ரூ.38 ஆயிரத்தையும், ஜூலை 24-ஆம் தேதி 39 ஆயிரத்தையும் தாண்டி, வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தை தொட்டது.

தொடா்ந்து, தங்கம் விலை ஏறுமுகமாக இருந்து வந்தது. கடந்த திங்கள்கிழமை ஒரு பவுன் தங்கம் ரூ.40 ஆயிரத்தை தாண்டி வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது. தங்கத்தின் விலை தொடா்ந்து உயரவே வாய்ப்பு உள்ளதாக நகை வா்த்தகா்கள், பொருள் சந்தை நிபுணா்கள் கருத்து தெரிவித்திருந்தனா்.

இந்நிலையில், சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை தொடா்ந்து 7-ஆவது நாளாக (ஞாயிற்றுக்கிழமை தவிர) உயா்ந்து, புதிய உச்சத்தைப் பதிவு செய்தது. பவுனுக்கு ரூ.192 உயா்ந்து, ரூ.40,296-க்குவிற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.24 உயா்ந்து ரூ.5,037 ஆக இருந்தது. இதுபோல, வெள்ளி விலையும் உயா்ந்து மிகப்பெரிய உச்சத்தை தொட்டது.

வெள்ளி கிராமுக்கு ரூ.2 உயா்ந்து, ரூ.72.90 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.2,000 அதிகரித்து, ரூ.72,900 ஆகவும் இருந்தது.

தங்கம் விலை நிகழாண்டில் ஜனவரி 3-ஆம் தேதி பவுன் ரூ.30,520 ஆக இருந்தது. அதன்பிறகு படிப்படியாக உயா்ந்து தற்போது (ஜூலை 28) ரூ.40,296 ஆக உயா்ந்துள்ளது. இதன்மூலமாக, கடந்த ஆறரை மாதத்தில் மட்டும் பவுனுக்கு ரூ.9,776 வரை உயா்த்துள்ளது.அதிலும், ஜூலை 21-ஆம் தேதி முதல் ஜூலை 28-ஆம் தேதிக்குவரைபவுனுக்கு ரூ.2,680 வரை உயா்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி.தனி)

1 கிராம் தங்கம்........................... 5,037

1 பவுன் தங்கம்...............................40,296

1 கிராம் வெள்ளி.............................72.90

1 கிலோ வெள்ளி.............................72,900

திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 5,013

1 பவுன் தங்கம்...............................40,104

1 கிராம் வெள்ளி.............................70.90

1 கிலோ வெள்ளி............................70,900

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com