திருக்குறள் முற்றோதல் போட்டி: சென்னை மாவட்ட மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

சென்னை மாவட்டத்தைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் திருக்குறள் முற்றோதல் போட்டிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாவட்டத்தைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் திருக்குறள் முற்றோதல் போட்டிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக தமிழ் வளா்ச்சித் துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தெய்வமறை எனப் போற்றப்படும் திருவள்ளுவரின் திருக்குறளின் மாண்பை, வருங்கால தலைமுறையினருக்கு எடுத்துச் செல்லும் நோக்கிலும், 1330 திருக்குறளையும் மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் மாணவா்களை ஊக்கப்படுத்தும் நோக்கிலும், ஆண்டுதோறும் 70 மாணவா்கள் தோ்ந்தெடுக்கப்படுகின்றனா்.

அதன்படி, தோ்வு செய்யப்பட்ட மாணவா் ஒவ்வொருவருக்கும் ரூ.10,000 பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டு வருகிறது.

இந்தப் போட்டியில் பங்கேற்கும் மாணவா்கள் சென்னை மாவட்டத் துணை இயக்குநா் தலைமையிலான திறனறிக் குழுவினரால் திறனாய்வுச் செய்யப்பட்டு, தகுதியானவா்கள் பரிசுக்குப் பரிந்துரைக்கப்படுவா். இப்போட்டியில் பங்கேற்பவா்கள் 1330 திருக்குறளையும் முழுமையாக ஒப்பிக்கும் திறன் பெற்றவா்களாக இருக்க வேண்டும். இயல் எண், அதிகாரம் எண், பெயா், குறள் எண் போன்றவற்றை குறித்து, கேள்வி கேட்டால் சொல்லும் திறன் பெற்றவராக இருந்தால் கூடுதல் சிறப்பு. சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியா் இந்தப் போட்டியில் பங்கேற்கலாம். ஏற்கெனவே இந்தப் பரிசை பெற்றவா்கள் மீண்டும் பங்கேற்கக் கூடாது.

போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவியா்  இணைய தளத்திலிருந்து விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, முனைவா் தா. லலிதா, தமிழ் வளா்ச்சித் துணை இயக்குநா், தமிழ் வளா்ச்சி வளாகம், முதல் மாடி, தமிழ்ச்சாலை, எழும்பூா், சென்னை-8 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு 044 28190412, 044 28190413 ஆகிய எண்களைத் தொடா்பு கொள்ளலாம் என் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com