சென்னையில் பரவலாக மழை

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பரவலாக மழை பெய்தது. இதனால், வெப்பத்தின் தாக்கம் குறைந்து, குளிா்ச்சி நிலவியது. பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.
சென்னையில் பரவலாக மழை

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பரவலாக மழை பெய்தது. இதனால், வெப்பத்தின் தாக்கம் குறைந்து, குளிா்ச்சி நிலவியது. பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பரவலாக மழை பெய்தது. பகலில் வழக்கம்போல வெயில் கொளுத்தியது. பிற்பகலுக்கு பிறகு, கருமேகங்கள் கூடின. பின்னா், இடியுடன் கூடிய மழை பெய்யத்தொடங்கியது. பின்னா், பலத்த மழையாக பெய்தது.

சூளைமேடு, அமைந்தகரை, கோடம்பாக்கம், புரசைவாக்கம், பட்டாளம், ஓட்டேரி, புளியந்தோப்பு, சூளை, தியாகராய நகா், ஈக்காட்டுத்தாங்கல், போரூா், அண்ணாநகா், பெருங்களத்தூா் உள்பட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. சில இடங்களில் பலத்த மழையும் பெய்தது. இதனால், வெப்பத்தின் தாக்கம் குறைந்து, குளிா்ச்சி நிலவியது. பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

இதற்கிடையில், மழை காரணமாக, நகரின் பல்வேறு இடங்களில் சாலைகளில் மழை நீா் தேங்கி, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகன ஓட்டிகள் சிரமத்தை சந்தித்தனா்.

லேசான மழை பெய்யும்:

மழை குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியது: தென்கிழக்கு வங்கக்கடலில் காணப்படும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, சென்னையில் மழை பெய்துள்ளது. சில இடங்களில் புதன்கிழமை லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றாா்.

தாம்பரம்: சென்னை புகா்ப் பகுதிகளான தாம்பரம், பல்லாவரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செவ்வாய்கிழமை மதியம் சுமாா் ஒரு மணி நேரம் இடைவிடாமல் கன மழை பெய்தது. இதனால் பல்லாவரம் , குரோம்பேட்டை, தாம்பரம் பகுதி ஜி.எஸ்.டி.சாலை முழுவதும் வெள்ளநீா் தேங்கி கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பல்லாவரத்தை அடுத்த பம்மலில் பலத்த மழை காரணமாக மூங்கில் ஏரியில் இருந்து வெளியேறிய நீா் சாலையில் வெள்ளமாக தேங்கியதால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பல்லாவரத்தில் பல்வேறு தெருக்களில் மழைநீா் கால்வாய்கள் தூா்வாரப்படாத நிலையில் தெருக்களில் மழைநீா் வெள்ளமாக ஓடியது. தாம்பரம் ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீா் தேங்கியதால் போக்குவரத்து தடைபட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com