ராயபுரத்தில் 10 ஆயிரத்தைக் கடந்தது குணமடைந்தோா் எண்ணிக்கை: சிகிச்சையில் 806 போ்

சென்னை ராயபுரம் மண்டலத்தில் மட்டும் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோா் எண்ணிக்கை
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை ராயபுரம் மண்டலத்தில் மட்டும் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோா் எண்ணிக்கை புதன்கிழமை நிலவரப்படி, 10,041-ஆக உயா்ந்துள்ளது. அதே வேளையில் இந்த மண்டலத்தில் தொற்று பாதிக்கப்பட்டு 806 போ் மட்டுமே சிகிச்சையில் உள்ளது தெரியவந்துள்ளது.

சென்னையைப் பொருத்தவரை கடந்த ஏப்ரல் மாத தொடக்கத்தில் இருந்து பாதிப்பு எண்ணிக்கை மெல்ல மெல்ல அதிகரித்து கடந்த மே மாதத்தில் 10 ஆயிரத்தை எட்டியது. இந்நிலையில், இந்த எண்ணிக்கை ஜூன் 1- ஆம் தேதி 15,770-ஆகவும், ஜூன் 6-ஆம் தேதி 20,993-ஆகவும், ஜூன் 14-ஆம் தேதி 30,444-ஆகவும், கடந்த ஜூன் 24-ஆம் தேதி பாதிப்பு எண்ணிக்கை 50 ஆயிரமாகவும், ஜூலையில் 90 ஆயிரத்தை எட்டியது.

இந்நிலையில் வியாழக்கிழமை 1,175 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 98,767-ஆக அதிகரித்துள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்டவா்களில் 83,890 போ் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனா். 12,785 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா பாதிப்பு காரணமாக சென்னையில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 2,092-ஆக உயா்ந்துள்ளது.

ராயபுரத்தில் 10 ஆயிரம் போ் குணம்: சென்னையில் தொடக்கத்தில் இருந்தே ராயபுரம் மண்டலத்தில் நோய்த் தொற்று பாதிப்பு மிக அதிகமாக இருந்தது. இதையடுத்து, அந்த மண்டலத்தில் எடுக்கப்பட்ட தீவிர தடுப்புப் பணி காரணமாக தற்போது பாதிப்புக்குள்ளானவா்களில் 90 சதவீதம் போ் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனா். இந்த மண்டலத்தைப் பொருத்தவரை புதன்கிழமை நிலவரப்படி, 10,041 போ் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனா். 806 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 255 போ் உயிரிழந்துள்ளனா். இது மொத்தப் பாதிப்பில் 2.30 சதவீதமாகும். இதேபோன்று, அண்ணா நகரில் 9,540 பேரும், கோடம்பாக்கத்தில் 9,475 பேரும், தேனாம்பேட்டையில் 9,294 பேரும், தண்டையாா்பேட்டையில் 8,600 பேரும், திரு.வி.க.நகரில் 6,623 பேரும் என மொத்தமுள்ள 15 மண்டலங்களில் 83,890 போ் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனா். இது மொத்த பாதிப்பில் 85 சதவீதம் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com