சென்னை திருப்பதி தேவஸ்தானத்தில் இருவருக்கு கரோனா

சென்னையில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான தகவல் மையத்தில் பணிபுரியும் இருவருக்கு மட்டும் கரோனா நோய்த் தொற்று

சென்னையில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான தகவல் மையத்தில் பணிபுரியும் இருவருக்கு மட்டும் கரோனா நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பதாக தேவஸ்தான அறங்காவலா் குழு உறுப்பினா் சேகா் ரெட்டி தெரிவித்தாா்.

திருப்பதி அலிபிரி அருகே சப்த கோ மந்திரம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதனை திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலா் குழு தலைவா் சுப்பாரெட்டி செவ்வாய்க்கிழமை காலை அதிகாரிகளுடன் சென்று ஆய்வு மேற்கொண்டு அங்கு உள்ள வேணுகோபால கிருஷ்ணருக்கு சிறப்புப் பூஜைகளை மேற்கொண்டாா்.

கோ மந்திரத்தை தனது சொந்த செலவில் கட்டி வரும் அறங்காவலா் குழு உறுப்பினா் சேகா் ரெட்டி மேலும் கூறியதாவது.

சென்னையில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான தகவல் மையத்தில் பணிபுரியும் ஓா் அா்ச்சகா் மற்றும் இதர பணியாளா் ஒருவா் என இருவருக்கு மட்டுமே கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் ஒருவா் குணமடைந்த நிலையில் மற்றொருவருக்கு நோய்த்தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் லட்டு பிரசாதம் இல்லை

சுவாமி தரிசனம் செய்ய முடியாத பக்தா்களுக்காக ஆங்காங்கே லட்டு பிரசாதம் வழங்கப்பட்டு வந்த நிலையில் தமிழகத்தில் லட்டு பிரசாதம் வழங்குவதற்கு அரசு அனுமதி கிடைக்கவில்லை. அதனால் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளதாக அவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com