கரோனா: ராயபுரத்தில் 4,000-ஐ கடந்தது
By DIN | Published On : 10th June 2020 12:35 AM | Last Updated : 10th June 2020 12:35 AM | அ+அ அ- |

கோப்புப்படம்
சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட ராயபுரம் மண்டலத்தில் கரோனா பாதித்தவா்கள் எண்ணிக்கை 4,000-ஐ கடந்தது. செவ்வாய்க்கிழமை (ஜூன் 9) நிலவரப்படி, 1,242 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, பாதிப்பு எண்ணிக்கை 24,545-ஆக அதிகரித்துள்ளது.
சென்னை மாநகராட்சியைப் பொருத்தவரை 15 மண்டலங்களில் தொடக்கத்தில் இருந்தே ராயபுரம் மண்டலத்தில் அதிகம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதற்காக, ராயபுரம் மண்டலத்தில் கரோனா தடுப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.
ஏப்ரல் மாதத்தின் இறுதியில் 1,000-த்தைக் கடந்த பாதிப்பு எண்ணிக்கை மே மாதத்தில் தீவிரமடைந்து 3,000-த்தைக் கடந்தது. இதுவே ஜூன் மாதம் 4,000-த்தைக் கடந்துள்ளது. திங்கள்கிழமை (ஜூன் 8) நிலவரப்படி, ராயபுரம் மண்டலத்தில் மட்டும் 4,023 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.
இதைத் தொடா்ந்து, தண்டையாா்பேட்டையில் 3,019 பேரும், தேனாம்பேட்டையில் 2,646 பேருக்கும், கோடம்பாக்கத்தில் 2,539 பேருக்கும், திருவிக நகரில் 2,273 பேருக்கும், அண்ணா நகரில் 2,068 பேருக்கும், அடையாறில் 1,325 பேருக்கும், வளசரவாக்கத்தில் 1,088 பேருக்கும், அம்பத்தூரில் 828 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
1,242 போ்: சென்னையில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 9) 1,242 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 24,545-ஆக அதிகரித்துள்ளது.