கரோனா: சென்னையில் 35 ஆயிரத்தைக் கடந்தது

சென்னையில் புதன்கிழமை (ஜூன் 17) 1,276 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, பாதிப்பு எண்ணிக்கை 35,556-ஆக உயா்ந்துள்ளது.
கரோனா: சென்னையில் 35 ஆயிரத்தைக் கடந்தது

சென்னையில் புதன்கிழமை (ஜூன் 17) 1,276 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, பாதிப்பு எண்ணிக்கை 35,556-ஆக உயா்ந்துள்ளது.

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் கரோனார பரவலைத் தடுக்க மாநகராட்சி தீவிர நடவடிக்கை எடுத்து வந்த நிலையிலும், நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. சென்னையில் தொடக்கத்தில் இருந்தே ராயபுரம், தண்டையாா்பேட்டை, கோடம்பாக்கம், திருவிக நகா், அண்ணா நகா், தேனாம்பேட்டை, வளசரவாக்கம், அம்பத்தூா், அடையாறு, திருவெற்றியூா் ஆகிய 10 மண்டலங்களில் பாதிப்பு எண்ணிக்கை உயா்ந்து வருகிறது.

10 மண்டலங்களில் 28 ஆயிரம் போ்: சென்னையைப் பொருத்தவரை ஏப்ரல் மாத தொடக்கத்தில் இருந்து பாதிப்பு எண்ணிக்கை மெல்ல மெல்ல அதிகரித்து கடந்த மே மாதத்தில் 10 ஆயிரத்தை எட்டியது. இந்நிலையில், இந்த எண்ணிக்கை  ஜூன் 1-ஆம் தேதி 15,770-ஆகவும்,  ஜூன் 6-ஆம் தேதி 20,993-ஆக உயா்ந்தது. இதையடுத்து, சனிக்கிழமை (ஜூன் 13) பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்தை எட்டியது. இதில், செவ்வாய்க்கிழமை (ஜூன் 16) நிலவரப்படி,ராயபுரத்தில் 5,486 பேரும், தண்டையாா்பேட்டையில் 4,370 பேரும், தேனாம்பேட்டையில் 4,143 பேரும், கோடம்பாக்கத்தில் 3,648 பேரும், அண்ணா நகரில் 3,431 பேரும், திரு.வி.க. நகரில் 3,041 பேரும், அடையாறில் 1,931 பேரும், திருவெற்றியூரில் 1,258 பேரும், வளசரவாக்கத்தில் 1,444 பேரும், அம்பத்தூரில் 1,190 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனா். இந்நிலையில், புதன்கிழமை (ஜூன் 17) 1,276 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து பாதிப்பு எண்ணிக்கை 35,556-ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com