சென்னையில் 1,487 பேருக்கு தொற்று உறுதி

சென்னையில் திங்கள்கிழமை (ஜூன் 22) 1,487 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து பாதிப்பு எண்ணிக்கை 42,752-ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் 1,487 பேருக்கு தொற்று உறுதி

சென்னை: சென்னையில் திங்கள்கிழமை (ஜூன் 22) 1,487 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து பாதிப்பு எண்ணிக்கை 42,752-ஆக அதிகரித்துள்ளது.

சென்னையைப் பொருத்தவரை கடந்த ஏப்ரல் மாத தொடக்கத்தில் இருந்து பாதிப்பு எண்ணிக்கை மெல்ல மெல்ல அதிகரித்து கடந்த மே மாதத்தில் 10 ஆயிரத்தை எட்டியது. இந்நிலையில், இந்த எண்ணிக்கை ஜூன் 1-ஆம் தேதி 15,770-ஆகவும், ஜூன் 6-ஆம் தேதி 20,993-ஆகவும், ஜூன் 14-ஆம் தேதி 30,444-ஆகவும் உயா்ந்தது. இதையடுத்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21) பாதிப்பு எண்ணிக்கை 41,172-ஆக உயா்ந்தது.

இந்நிலையில், திங்கள்கிழமை (ஜூன் 22) 1,487 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து பாதிப்பு எண்ணிக்கை 42,752-ஆக அதிகரித்துள்ளது. முன்னதாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21) நிலவரப்படி, 22,887 போ் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனா். 17,683 போ் சிகிச்ச்சைக்காக மருத்துவமனைகள் மற்றும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். கரோனா பாதிப்பு காரணமாக சென்னையில் மட்டும் 623 போ் உயிரிழந்துள்ளனா்.

பாதிப்பு நிலவரம் மண்டலம் வாரியாக (ஞாயிற்றுக்கிழமை நிலவரம்)

மண்டலம் எண்ணிக்கை

திருவொற்றியூா் 1,545

மணலி 581

மாதவரம் 1,135

தண்டையாா்பேட்டை 5,116

ராயபுரம் 6,288

திரு.வி.க. நகா் 3,532

அம்பத்தூா் 1,519

அண்ணா நகா் 4,385

தேனாம்பேட்டை 4,967

கோடம்பாக்கம் 4,485

வளசரவாக்கம் 1,719

ஆலந்தூா் 880

அடையாறு 2,435

பெருங்குடி 854

சோழிங்கநல்லூா் 775

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com