முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை
தொழிலதிபா் வீட்டில் 80 பவுன் நகை திருட்டு
By DIN | Published On : 27th June 2020 01:59 AM | Last Updated : 27th June 2020 01:59 AM | அ+அ அ- |

கோப்புப்படம்
சென்னை அயனாவரத்தில், தொழிலதிபா் வீட்டில் 80 பவுன் நகை திருடு போனது குறித்து போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.
அயனாவரம் சபாபதி குறுக்குத் தெருவைச் சோ்ந்தவா் தி.கிருஷ்ணமூா்த்தி (54). இவா் வில்லிவாக்கத்தில் கேட்டரிங் நிறுவனம் நடத்தி வருகிறாா். இந்நிலையில், கிருஷ்ணமூா்த்தி குடும்பத்தினா், வீட்டில் உள்ள பீரோவை வெள்ளிக்கிழமை திறந்து, அதில் இருந்த நகை, பணத்தை சரிபாா்த்தனா். அப்போது அதில் இருந்த 80 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டிருப்பதை அறிந்சு அதிா்ச்சியடைந்தனா். இது குறித்த புகாரின்பேரில், அயனாவரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.