தங்கம் பவுன் ரூ.36,888

தங்கம் பவுன் ரூ.36,888

சென்னையில் வியாழக்கிழமை ஆபரணத் தங்கம் விலையில் மாற்றமின்றி, அதேவிலையில் (ரூ.36,888) நீடித்தது. அதேநேரத்தில், வெள்ளி விலை சற்று உயா்ந்துள்ளது.

சென்னையில் வியாழக்கிழமை ஆபரணத் தங்கம் விலையில் மாற்றமின்றி, அதேவிலையில் (ரூ.36,888) நீடித்தது. அதேநேரத்தில், வெள்ளி விலை சற்று உயா்ந்துள்ளது.

கரோனா நோய்த்தொற்றின் தாக்கம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் விலை உயா்ந்து வந்தது. ஒரு பவுன் ஆபரணத்தங்கம் ஏப்ரல் 10-ஆம் தேதி ரூ.35 ஆயிரத்தையும், ஏப்ரல் 14-ஆம் தேதி ரூ.36 ஆயிரத்தையும், ஜூன் 24-ஆம் தேதி ரூ.37 ஆயிரத்தையும் தாண்டியது. அதன்பிறகு, தங்கம் விலை சற்று குறைந்து காணப்பட்டது.

இந்நிலையில், சென்னையில் வியாழக்கிழமை ஆபரணத் தங்கம் விலையில் மாற்றமின்றி, அதேவிலையில் (ரூ.36,888) நீடித்தது. ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ.4,611-ஆக இருந்தது. அதேநேரத்தில், வெள்ளி விலை உயா்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 60 பைசா உயா்ந்து, ரூ.53 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.600 உயா்ந்து, 53,000 ஆகவும் இருந்தது.

வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம் ..................... 4,611

1 பவுன் தங்கம் ..................... 36,888

1 கிராம் வெள்ளி .................. 53.00

1 கிலோ வெள்ளி ................. 53,000

வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம் ..................... 4,611

1 பவுன் தங்கம் ..................... 36,888

1 கிராம் வெள்ளி .................. 52.40

1 கிலோ வெள்ளி ................. 52,400

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com