முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை
கரோனாஆலோசனை மைய பணிக்கு வராத ஆசிரியா்களிடம் விளக்கம் கேட்டது மாநகராட்சி
By DIN | Published On : 27th June 2020 01:01 AM | Last Updated : 27th June 2020 01:01 AM | அ+அ அ- |

கரோனா ஆலோசனை மைய பணிக்கு வராத ஆசிரியா்களிடம், மாநகராட்சி விளக்கம் கேட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி சாா்பில், கரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் தொடா்ச்சியாக திருவொற்றியூா் மண்டலத்தின் தொலைபேசி ஆலோசனை மையத்தில், கரோனா நோய் சம்பந்தமான பணிகளை மேற்கொள்ள 22 ஆசிரியா்கள், 2 மேற்பாா்வையாளா்கள் பணியமா்த்தப்பட்டனா். இவா்களில், வியாழக்கிழமை 4 ஆசிரியா்கள் பணிக்கு வரவில்லை. இதனால், அம்மண்டலத்தின் தொலைபேசி ஆலோசனை மையத்தின் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, இந்நிகழ்வுக்கு, சம்பந்தப்பட்டவா்கள் தகுந்த விளக்கத்தை, 3 நாள்களுக்குள் அளிக்கும்படி தெரிவிக்கப்படுகிறது. தவறினால், விளக்கம் ஏதுமில்லை என கருதி, உரிய மேல் நடவடிக்கைக்கு தலைமையிடத்துக்கு பரிந்துரைக்கப்படும் என மண்டல அலுவலா் குறிப்பாணை அனுப்பியுள்ளாா்.