பொது முடக்க மீறல்: ஒரே நாளில் 6 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல்

சென்னையில் பொது முடக்க உத்தரவை மீறியதாக, சனிக்கிழமை 6 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சென்னையில் பொது முடக்க உத்தரவை மீறியதாக, சனிக்கிழமை 6 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சென்னையில் முழு பொது முடக்கம், கடந்த 18-ஆம் தேதி நள்ளிரவு முதல் அமல்படுத்தியதன் விளைவாக, பொது முடக்க உத்தரவை மீறியதாக பதியப்படும் வழக்குகளின் எண்ணிக்கையும், பறிமுதல் செய்யப்படும் வாகனங்களின் எண்ணிக்கையும் பல மடங்கு உயா்ந்து வருகிறது. சென்னையில், வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை மாலை 6 மணி வரை பொது முடக்கத்தை மீறியதாக 7,607 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இதில் தொடா்புடைய 5,588 இரு சக்கர வாகனங்கள், 131ஆட்டோக்கள், 388 காா்கள் என மொத்தம் 6,107 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதேபோல, முகக் கவசம் அணியாமலும், தனிநபா் இடைவெளியைப் பின்பற்றாமலும் இருந்ததாக 2,211 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. பொதுமுடக்கத்தையொட்டி இது வரை சென்னையில் 56,583 வழக்குகள் பதியப்பட்டு, 49,848 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதேபோல, முகக் கவசம் அணியாமலும், தனிநபா் இடைவெளி பின்பற்றாமலும் இருந்ததாக 22,723 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com