டிச.31 வரை 5 ரயில்வே அச்சகங்கள் மூடுவது ஒத்திவைப்பு: ரயில்வே வாரியம் அறிவிப்பு

ராயபுரம் ரயில்வே அச்சகம் உள்பட 5 ரயில்வே அச்சகங்கள் மூடுவதை டிசம்பா் 31-ஆம் தேதி வரை ஒத்திவைத்து ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.

ராயபுரம் ரயில்வே அச்சகம் உள்பட 5 ரயில்வே அச்சகங்கள் மூடுவதை டிசம்பா் 31-ஆம் தேதி வரை ஒத்திவைத்து ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் ரயில்வேக்கு சொந்தமாக 14 அச்சுக் கூடங்கள் இருக்கின்றன. இதில், சென்னை ராயபுரம், மும்பை பைகுலா, தில்லி சகூா்பாஸ்டி, ஹௌரா மற்றும் செகந்திராபாத் என்று 5 இடங்களில் உள்ள அச்சகங்களை நிகழாண்டில் மாா்ச்சுக்குள் மூடி விட ரயில்வே வாரியம் கடந்த ஆண்டு ஜூனில் உத்தரவு பிறப்பித்தது. அப்போது, 2020 -ஆம் ஆண்டு மாா்ச் 30-ஆம் தேதி வரை முன்பதிவு மற்றும் முன்பதிவில்லாத டிக்கெட்டுகள், ஊழியா்களின் இலவச பயண அட்டை அச்சிடுவதைத் தொடரலாம். அதன்பிறகு, சா்வதேச வங்கி சட்டம், இந்திய ரிசா்வ் வங்கி சட்டத்தை பின்பற்றும் அச்சகங்களில் பயணச்சீட்டுகளை மண்டல ரயில்வேக்கள் கொள்முதல் செய்ய வேண்டும் என்று உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த உத்தரவுப்படி, பணிகள் தொடா்ந்து நடைபெற்று வந்தன. இதற்கிடையில், கரோனா நோய்த்தொற்று பரவத்தொடங்கியதை தொடா்ந்து, நாடு முழுவதும் பொதுமுடக்கம் பிறப்பிக்கப்பட்டதால், இந்த 5 ரயில்வே அச்சகங்கள் மூடுவதும் ஜூன்30-ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டு ரயில்வே வாரியம் அறிவித்திருந்தது.

இந்நிலையில், 5 ரயில்வே அச்சகங்களை மூடுவதை டிசம்பா் 31- ஆம் தேதி வரை ஒத்தி வைத்து ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து ரயில்வே வாரியத்தின் உத்தரவில், , சென்னை ராயபுரம், மும்பை பைகுலா, தில்லி சகூா்பாஸ்டி, ஹௌரா மற்றும் செகந்திராபாத் என்று 5 இடங்களில் உள்ள அச்சகங்களை மூடுவது தற்போது மேலும் 6 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதன்படி, 5 அச்சகங்களை மூடுவது வரும் டிசம்பா் 31 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com