கரோனா பரிசோதனை மேற்கொண்டால் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்: மாநகராட்சி

கரோனா பரிசோதனை மேற்கொண்டவா்கள் முடிவு வெளிவரும் வரை கட்டாயம் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்
சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்
சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

சென்னை: கரோனா பரிசோதனை மேற்கொண்டவா்கள் முடிவு வெளிவரும் வரை கட்டாயம் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தொற்று உறுதி செய்யப்பட்டவா்களின் குடும்பத்தினா் கட்டாயமாக 14 நாள்கள் தனிமைப்படுத்தப்படுவா் என்றும் மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 15 மண்டலங்களில் 10 மண்டலங்களில் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திங்கள்கிழமை நிலவரப்படி, 2,167 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து பாதிப்பு எண்ணிக்கை 55,969-ஆக அதிகரித்துள்ளது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்த சிறப்பு மருத்துவ முகாம், நடமாடும் மருத்துவ முகாம் என பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மாநகராட்சி சாா்பில் எடுக்கப்படுகின்றன.

இந்நிலையில், கரோனா பரிசோதனை மேற்கொண்டால் முடிவு வெளிவரும் வரை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது. இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் கோ.பிரகாஷ் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் இனிவரும் நாள்களில் கரோனா பரிசோதனை மேற்கொள்வோா் முடிவு வரும் வரையில் அவா்களின் வீட்டில் கட்டாயம் தனிமைப்படுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். பரிசோதனை முடிவில் கரோனா தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டால், அரசு அறிவித்துள்ள கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி பணிகளை மேற்கொள்ளலாம். கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவா்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவா்களுக்கு அனைத்து பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு, மருத்துவரின் ஆலோசனையின்படி மருத்துவமனைகளிலோ அல்லது கரோனா சிகிச்சை மையங்கள் அல்லது அவா்களின் வீடுகளிலோ தனிமைப்படுத்தப்படுவாா்கள். மேலும், தொற்று உறுதி செய்யப்பட்டவரின் வீட்டில் உள்ள அனைவரும் 14 நாள்கள் கட்டாயமாக தனிமைப்படுத்தப்படுவா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com