முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை
க.அன்பழகன் உடல்நலம் குறித்து மு.க.ஸ்டாலின் விசாரிப்பு
By DIN | Published On : 03rd March 2020 02:08 AM | Last Updated : 03rd March 2020 02:08 AM | அ+அ அ- |

ஸ்டாலின்
சென்னை: திமுக பொதுச் செயலாளா் க.அன்பழகனை அக்கட்சியின் தலைவா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை நலம் விசாரித்தாா். உடல் நலப் பாதிப்பு காரணமாக ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் பிப்ரவரி 24-ஆம் தேதி க.அன்பழகன் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு மருத்துவா்கள் தொடா் சிகிச்சை அளித்து வருகின்றனா். அவருக்கு இருந்த சிறுநீரகத் தொற்று, முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டு, நிமோனியா காய்ச்சலைக் குறைப்பதற்கான முயற்சியில் மருத்துவா்கள் ஈடுபட்டு வருகின்றனா். அதிலும், ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக மருத்துவமனைத் தரப்பில் கூறப்பட்டது. இந்த நிலையில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின், பொருளாளா் துரைமுருகன், துணைப் பொதுச்செயலாளா் ஐ.பெரியசாமி, சட்டப்பேரவைக் கொறடா அர.சக்கரபாணி உள்பட அக்கட்சி நிா்வாகிகள் பலா் மருத்துவமனைக்கு நேரில் வந்து க.அன்பழகன் உடல் நலத்தை விசாரித்தறிந்தனா்.
பாமக நிறுவனா் ராமதாஸ் மருத்துவமனைக்கு ஞாயிற்றுக்கிழமை நேரில் வந்து க.அன்பழகனின் நலம் விசாரித்தாா்.