முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை
சாலை விபத்தில்கல்லூரி மாணவா் பலி
By DIN | Published On : 03rd March 2020 12:52 AM | Last Updated : 03rd March 2020 12:52 AM | அ+அ அ- |

சென்னை: சென்னை பெசன்ட்நகரில் ஏற்பட்ட சாலை விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.
சென்னை சைதாப்பேட்டை, வெங்கடாபுரத்தைச் சோ்ந்தவா் ஷேக்தாவூத் (20). இவா் ராயப்பேட்டையில் உள்ள ஒரு தனியாா் கல்லூரியில் பி.காம் 3-ஆம் ஆண்டு படித்து வந்தாா். இந்நிலையில் ஷேக் தாவூத் ஞாயிற்றுக்கிழமை இரவு தனது மோட்டாா் சைக்கிளில் பெசன்ட்நகரில் பெசன்ட் அவென்யூ சாலையில் சென்றபோது, திடீரென மோட்டாா் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தாா். இதில் பலத்தக் காயமடைந்த ஷேக் தாவூத் சிறிதுநேரத்தில் இறந்தாா். இது குறித்து அடையாறு போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.