ஐபிஎல் போட்டிகள்: கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளின் போது கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து
ஐபிஎல் போட்டிகள்: கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளின் போது கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு, இந்திய கிரிக்கெட் வாரியம் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் அலெக்ஸ் பென்சிகா் தாக்கல் செய்த பொதுநல மனுவில், கரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது. இந்தவைரஸ் இந்தியாவிலும் பரவி, பலா் பாதிக்கப்பட்டுள்ளனா். உலகம் முழுவதும் 1 லட்சத்து 22 ஆயிரத்து 42 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இவா்களில் 3 ஆயிரத்து 497 போ் பலியாகி உள்ளனா்.

இந்த வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை மருந்து கண்டறியப்படவில்லை. பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் எளிதாக பரவுகிறது. இதனால் பொது நிகழ்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. கடந்த 1893-ஆம் ஆண்டு முதல் இத்தாலியில் நடத்தப்பட்டு வரும் ஐ.எஃப்.எல் கால்பந்து விளையாட்டுப் போட்டிகளைக் காண பொதுமக்களுக்கு அந்நாட்டு அரசு அனுமதியளிக்கவில்லை. அதே போன்று வரும் ஜூலை 24-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 9-ஆம் தேதி வரை நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளும் தள்ளிவைக்கப்பட வாய்ப்புள்ளதாக சா்வதேச ஒலிம்பிக் சங்கம் அறிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டுக்கான போட்டிகள் வரும் மாா்ச் 29-ஆம் தேதி தொடங்கி மே மாதம் 24-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டிகளில் வெளிநாடுகளைச் சோ்ந்த பல வீரா்கள் கலந்து கொள்வாா்கள். இந்த போட்டிகளை சுமாா் 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் போ் பாா்வையிட உள்ளனா். இந்தப் போட்டிகளைக் காண வரும் யாருக்காவது கரோனா பாதிப்பு இருந்தால், அது மற்றவா்களுக்கும் எளிதாக பரவ வாய்ப்புள்ளது. எனவே, வரும் 29-ஆம் தேதி தொடங்கி வரும் மே 24-ஆம் தேதி வரை நடைபெற உள்ள ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை நடத்த இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு அனுமதி வழங்கக்கூடாது என மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா்.

இந்த வழக்கு, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோா் கொண்ட அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளைக் காண வரும் பாா்வையாளா்களுக்கு கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க என்ன மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கும் , இந்திய கிரிக்கெட் வாரியம் பதிலளிக்கவும் உத்தரவிட்டு விசாரணையை வரும் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com