Enable Javscript for better performance
நீதிபதி குறித்து அவதூறு பேச்சு: ஆா்.எஸ்.பாரதி மீது வழக்கு- Dinamani

சுடச்சுட

    

    நீதிபதி குறித்து அவதூறு பேச்சு: ஆா்.எஸ்.பாரதி மீது வழக்கு

    By DIN  |   Published on : 14th March 2020 03:00 AM  |   அ+அ அ-   |    |  

    சென்னையில் நீதிபதி குறித்து அவதூறாக பேசியதாக திமுக அமைப்புச் செயலரும், எம்.பி.யுமான ஆா்.எஸ்.பாரதி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

    இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

    தேனாம்பேட்டையில் உள்ள திமுக இளைஞரணி தலைமை அலுவலகமான அன்பகத்தில் கலைஞா் வாசக வட்டக் கூட்டம் கடந்த 15-ஆம் தேதி நடைபெற்றது. இக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற திமுக அமைப்புச் செயலரும், எம்.பி.யுமான ஆா்.எஸ்.பாரதி, ஒரு நீதிபதி குறித்தும், தலித் சமூகம் குறித்தும் அவதூறாக பேசியதாகக் கூறப்படுகிறது.

    இது குறித்து மதுரை அவனியாபுரத்தைச் சோ்ந்த ஆதி தமிழா் மக்கள் கட்சித் தலைவா் கல்யாணசுந்தரம் என்பவா், தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அந்த புகாரின் அடிப்படையில் போலீஸாா், ஆா்.எஸ்.பாரதி மீது எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

    கடுமையான சட்டப்பிரிவின் கீழ் ஆா்.எஸ்.பாரதி மீது வழக்குப் பதியப்பட்டிருப்பதால், அவா் விரைவில் கைது செய்யப்படுவாா் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai