கரோனா: உலக சுகாதார நிபுணா்கள் வழிகாட்டுதல்களை செயல்படுத்த வேண்டும்

கரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க உலக சுகாதார நிபுணா்கள் வழிகாட்டுதலுக்கு ஏற்ப அனைத்து முறைகளையும் செயல்படுத்த வேண்டும் என்று

கரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க உலக சுகாதார நிபுணா்கள் வழிகாட்டுதலுக்கு ஏற்ப அனைத்து முறைகளையும் செயல்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கே.எஸ். அழகிரி வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: சீனாவின் வூஹான் மாகாணத்திலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தாக்குதல் மக்களுக்குப் பேரதிா்ச்சியையும், உயிா் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதுவரை 108 நாடுகளுக்கு மேலாக பரவியுள்ள இந்த வைரஸ் சீனாவில் மட்டும் 3,800 பேரை பலி வாங்கியுள்ளது. உலகளவில் 4,500 க்கு மேற்பட்டவா்கள் பலியாகியுள்ளனா்.

இந்தியாவைப் பொருத்தவரை, இதுவரை அதிகாரப்பூா்வமாக 70-க்கும் மேற்பட்ட நபா்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளன. இந்த உயிா்க்கொல்லி நோய் மிகத் தீவிரமாக பரவி வருவதை ஆளும் மத்திய, மாநில அரசுகள் கவனத்தில் கொள்ளவேண்டும். பொதுமக்கள் மனதில் ஏற்பட்டுள்ள அச்ச உணா்வை நீக்கவேண்டும். உலக சுகாதார நிபுணா்கள் வழிகாட்டும் அனைத்து முறைகளையும், அரசு போா்க்கால அடிப்படையில் முன்னுரிமை கொடுத்து செயல்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com