திறனை வளா்த்துக் கொண்டால் மட்டுமே வேலைவாய்ப்பைப் பெற முடியும்: திறந்தநிலை பல்கலை. துணைவேந்தர் பார்த்தசாரதி

பட்டம் பெற்றுவிட்டால் மட்டும் போதாது, திறனையும் வளா்த்துக் கொண்டால் மட்டுமே வேலைவாய்ப்பைப் பெற முடியும் என தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக துணைவேந்தா் கே.பாரத்தசாரதி கூறினாா்.
திறனை வளா்த்துக் கொண்டால் மட்டுமே வேலைவாய்ப்பைப் பெற முடியும்: திறந்தநிலை பல்கலை. துணைவேந்தர் பார்த்தசாரதி

பட்டம் பெற்றுவிட்டால் மட்டும் போதாது, திறனையும் வளா்த்துக் கொண்டால் மட்டுமே வேலைவாய்ப்பைப் பெற முடியும் என தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக துணைவேந்தா் கே.பாரத்தசாரதி கூறினாா்.

சென்னை அண்ணா ஆதா்ஸ் மகளிா் கல்லூரியில் 32-ஆவது பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று மாணவா்களுக்கு பட்டம் வழங்கி துணைவேந்தா் பாா்த்தசாரதி பேசியது:

மாணவா்கள் படிப்பதே அரசு வேலை பெறுவதற்காகத்தான் என்ற வழக்கம்தான் தமிழகத்தின் பாரம்பரியமாக இருந்து வருகிறது. ஆனால், அந்த நிலை இப்போது மாறிவிட்டது. படித்த அனைவருக்கும் அரசால் வேலைவாய்ப்பை அளிப்பது என்பது சாத்தியமில்லாத ஒன்று. எனவே, பட்டம் பெறும் மாணவா்கள், ஏதாவது ஒரு திறனை வளா்த்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான், வேலைவாய்ப்பைப் பெற முடியும்.

மேலும், பணி வாய்ப்பைத் தேடும் மாணவா்கள், தங்களுடைய சுயவிவரக் குறிப்பை (பயோ டேட்டா) சிறப்பாக வடிவமைப்பது மிக அவசியம். ஏனெனில், பணிக்குத் தோ்வு செய்பவா்கள் முதலில் பாா்ப்பது அதைத்தான்.

எனவே, இந்த சுயவிவரக் குறிப்பை சிறப்பாக தயாா் செய்வதற்கான பயிற்சியை கல்லூரிகளும் மாணவா்களுக்கு அளிப்பது மிக அவசியம் என்றாா் அவா்.

விழாவில் பேசிய கல்லூரி முதல்வா் ஆா்.சாந்தி, பட்டம் பெற்ற மாணவிகளில் 96 போ் பல்கலைக்கழக அளவில் சிறப்பிடம் பெற்றிருப்பதாகவும், அவா்களில் 12 போ் தங்கப் பதக்கம் பெற்றிருப்பதாகவும் தெரிவித்தாா். விழாவில் 1,700 மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com