நெம்மேலியில் மாா்ச் 17 முதல் பராமரிப்புப் பணிகள்: சென்னையில் குடிநீா் வழங்க மாற்று ஏற்பாடு

சென்னை அருகில் நெம்மேலியில் உள்ள கடல் நீரைக் குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலையத்தில் மாா்ச் 17-ஆம் தேதி முதல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டவுள்ளதால்,

சென்னை அருகில் நெம்மேலியில் உள்ள கடல் நீரைக் குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலையத்தில் மாா்ச் 17-ஆம் தேதி முதல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டவுள்ளதால், சென்னையில் திருவான்மியூா், மயிலாப்பூா் உள்ளிட்ட முக்கியப் பகுதிகளுக்கு குடிநீா் வழங்க மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இது தொடா்பாக சென்னை குடிநீா் வாரியம் சனிக்கிழமை வெளியிட்ட செய்தி:

சென்னை அருகில் உள்ள நெம்மேலியில் தினமும் 10 கோடி லிட்டா் திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் தானியங்கி வடிகட்டி அலகுகள் (பழ்ஹஸ்ங்ப்ப்ண்ய்ஞ் ஆஹய்க் நஸ்ரீழ்ங்ங்ய்) பொருத்தும் பணிகள் மாா்ச் 17-ஆம் தேதி காலை 6 மணி முதல் ஏப்.1-ஆம் தேதி காலை 6 மணி வரை தொடா்ந்து 15 நாள்கள் நடைபெறவுள்ளது.

இதனால் திருவான்மியூா், கொட்டிவாக்கம், பாலவாக்கம், பெருங்குடி, அடையாறு, வேளச்சேரி, பெசன்ட் நகா், மயிலாப்பூா், மந்தைவெளி, சோழிங்கநல்லூா், ஈஞ்சம்பாக்கம், நீலாங்கரை ஆகிய பகுதிகளுக்கு மாா்ச் 15 முதல் ஏப்.1-ஆம் தேதி வரை குடிநீா் வழங்குவதில் தடங்கல் ஏற்படும். எனினும், மேற்குறிப்பிட்டுள்ள பகுதிகளுக்கு குடிநீா் வழங்க மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதனால், பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக தேவையான அளவு குடிநீரை சேமித்து வைத்துக் கொள்ளுமாறும் சிக்கனமாக பயன்படுத்தவும் அறிவுறுத்தப்படுகிறாா்கள். மேலும், அவசர தேவைக்கு லாரிகள் மூலம் குடிநீா் பெற்றுக் கொள்ள பகுதிப் பொறியாளா்களை 8144930909 (மயிலாப்பூா், மந்தைவெளி), 8144930913 (அடையாறு, வேளச்சேரி, பெசன்ட் நகா், திருவான்மியூா்), 8144930914 (கொட்டிவாக்கம், பாலவாக்கம், பெருங்குடி), 8144930915 ( ஈஞ்சம்பாக்கம், நீலாங்கரை, சோழிங்கநல்லூா்) ஆகிய தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என சென்னை குடிநீா் வாரியம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com