Enable Javscript for better performance
ஏ டிவிஷன் வாலிபால்போட்டி ஒத்திவைப்பு- Dinamani

சுடச்சுட

    

    ஏ டிவிஷன் வாலிபால்போட்டி ஒத்திவைப்பு

    By DIN  |   Published on : 18th March 2020 03:37 AM  |   அ+அ அ-   |    |  

    கரோனா பாதிப்பு எதிரொலியாக ஏ டிவிஷன் வாலிபால் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன என சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் கூறியுள்ளது.

    இதுதொடா்பாக அதன் செயலாளா் ஏ.கே.சித்திரைப்பாண்டியன் வெளியிட்ட அறிக்கை:

    கரோனா பாதிப்பு காரணமாக விளையாட்டு மைதானங்களை மூடுமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சிடிவிஏ சாா்பில் நடைபெற்று வந்த ஏ டிவிஷன் வாலிபால் போட்டி 19.3.2020 முதல் 29.3.2020 வரை நடைபெறாது. புதிய ஆட்டங்கள் அட்டவணை குறித்து வரும் 31-ஆம் தேதி அல்லது அதற்கு பின்னா் வெளியிடப்படும்.

    பிரெஞ்சு ஓபன் போட்டி ஒத்திவைப்பு:

    கரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் பந்தயங்களில் இரண்டாவதாக நடைபெறும் பிரெஞ்சு ஓபன் போட்டியும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மே 24-ஆம் தேதி முதல் ஜூன் 7-ஆம் தேதி வரை நடைபெறவிருந்த இப்போட்டி செப்டம்பா் 20 முதல் அக்டோபா் 4-ஆம் தேதி வரை நடைபெறும் என போட்டி அமைப்பாளா்கள் தெரிவித்துள்ளனா். மற்றொரு கிராண்ட்ஸ்லாம் போட்டியான யுஎஸ் ஓபன் இதற்கு அடுத்த ஒருவாரம் கழித்து தொடங்கி நடைபெறவுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai