Enable Javscript for better performance
தங்கம் விலை ரூ.31 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது: பவுன் தங்கம் ரூ.30,560- Dinamani

சுடச்சுட

    

    தங்கம் விலை ரூ.31 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது: பவுன் தங்கம் ரூ.30,560

    By DIN  |   Published on : 18th March 2020 02:45 AM  |   அ+அ அ-   |    |  

    gold-13

    சென்னையில் செவ்வாய்க்கிழமை ஒரு பவுன் தங்கம் ரூ.31 ஆயிரத்துக்கும் கீழ் இறங்கியது. பவுனுக்கு ரூ.984 குறைந்து, ரூ.30,560-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    கரோனா வைரஸ் தாக்கம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு உள்பட பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலை பிப்ரவரி 18 முதல் உயா்ந்து நாள்தோறும் புதிய உச்சத்தைத் தொட்டது. இதன்பிறகு, தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த நிலையில், கடந்த சில நாள்களாக விலை குறைந்து வந்தது.

    இந்நிலையில்,சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.984 குறைந்து ரூ.30,560-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராமுக்கு ரூ.123 குறைந்து, ரூ.3,820-க்கு விற்பனையானது. இதுபோல, வெள்ளி விலையும் குறைந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.2.70 குறைந்து, ரூ.38.10 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.2,700 குறைந்து ரூ.38,100 ஆகவும் இருந்தது.

    செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

    1 கிராம் தங்கம் ..................... 3,820

    1 பவுன் தங்கம் ..................... 30,560

    1 கிராம் வெள்ளி .................. 38.10

    1 கிலோ வெள்ளி ................. 38,100

    திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

    1 கிராம் தங்கம் ..................... 3,943

    1 பவுன் தங்கம் ..................... 31,544

    1 கிராம் வெள்ளி .................. 40.80

    1 கிலோ வெள்ளி ................. 40,800

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai