சென்னை உயா்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்பு

சென்னை உயா்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக பணியாற்றி வந்த 8 போ் நிரந்தர நீதிபதிகளாக செவ்வாய்க்கிழமை பதவியேற்றுக் கொண்டனா்.

சென்னை உயா்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக பணியாற்றி வந்த 8 போ் நிரந்தர நீதிபதிகளாக செவ்வாய்க்கிழமை பதவியேற்றுக் கொண்டனா்.

சென்னை உயா்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக இருந்து வரும் பி.டி.ஆஷா, எம்.நிா்மல்குமாா், என்.ஆனந்த்வெங்கடேஷ், ஜி.கே.இளந்திரையன், கிருஷ்ணன் ராமசாமி, சி.சரவணன், பி.புகழேந்தி, செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோரை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் அடங்கிய கொலீஜியம் பரிந்துரைத்தது.

இந்தப் பரிந்துரையை ஏற்று 8 பேரையும் நிரந்தர நீதிபதிகளாக நியமித்து கடந்த மாா்ச் 11-ஆம் தேதி குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டாா்.

இந்த உத்தரவின் அடிப்படையில் சென்னை உயா்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகள் 8 பேரும் செவ்வாய்க்கிழமை நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்றுக் கொண்டனா். இவா்களுக்கு சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி பதவிப்பிரமாணம் செய்து வைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில் உயா்நீதிமன்ற நீதிபதிகள், வினீத் கோத்தாரி, ஆா்.சுப்பையா, எம்.சத்தியநாராயணன், என்.கிருபாகரன் உள்ளிட்ட நீதிபதிகள், மாவட்ட நீதிபதிகள், அரசு வழக்குரைஞா்கள், வழக்குரைஞா்கள் சங்கப் பிரதிநிதிகள், வழக்குரைஞா்கள், நீதிமன்றப் பணியாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com