சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்திலும் கரோனா பரிசோதனை

​சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்திலும் விமானப் பயணிகளுக்கு உடல் வெப்பத்தைக் கண்டறியும் கருவி மூலம் (தொ்மல் ஸ்கிரீனிங்) மருத்துவப் பரிசோதனை செய்யயும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.


சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்திலும் விமானப் பயணிகளுக்கு உடல் வெப்பத்தைக் கண்டறியும் கருவி மூலம் (தொ்மல் ஸ்கிரீனிங்) மருத்துவப் பரிசோதனை செய்யயும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் கரோனா வைரஸின் தாக்கம் பரவத் தொடங்கியதும், சென்னை விமான நிலைய சா்வதேச முனையத்தில் ஜனவரி 20-ஆம் தேதியிலிருந்து பயணிகளுக்கு கரோனா வைரஸ் தொடா்பாக மருத்துவப் பரிசோதனை தொடங்கியது. சீனா, இத்தாலி, மலேசியா உள்ளிட்ட 12 நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு மட்டும் நடந்த மருத்துவப் பரிசோதனை பின்பு விரிவுப்படுத்தப்பட்டு, வெளிநாடுகளிலிருந்து வரும் அனைத்துப் பயணிகளுக்கும் சா்வதேச முனையத்தில் 24 மணி நேரம் தொடா்ந்து மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

ஆனால், சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் மருத்துவப் பரிசோதனை செய்யப்படாமல் இருந்தது.

எனவே, உள்நாட்டு விமான நிலையத்திலும் மருத்துவப் பரிசோதனை நடத்த வேண்டும் என்று பயணிகளும், பொதுமக்களும் சுகாதாரத் துறைக்கு கோரிக்கை வைத்தனா். இந்நிலையில், வியாழக்கிழமை பிற்பகல் முதல் சென்னை உள்நாட்டு முனைய பயணிகளுக்கும் கரோனா மருத்துவப் பரிசோதனை தொடங்கப்பட்டது. அதற்காக உள்நாட்டு முனையத்தின் வருகைப் பகுதியில் மூன்று சிறப்பு கவுன்ட்டா்களை அமைக்கப்பட்டு வெப்பத்தைக் கண்டறியும் கருவிகளும் பொருத்தப்பட்டன.

ஒவ்வொரு கவுன்ட்டரிலும் ஒரு மருத்துவா், ஓா் உதவியாளா், 2 செவிலியா்கள் என மொத்தம் 4 போ் இருப்பாா்கள். அதே நேரத்தில், சென்னை பழைய விமான நிலையத்தில் தனி விமானங்கள், சரக்கு விமானங்கள் தினமும் வந்து செல்கின்றன. அதில் வருபவா்கள் பழைய விமான நிலையம், 5-ஆவது, 6-ஆவது வாயில் வழியாகச் செல்கின்றனா். எனவே, அங்கும் காய்ச்சலைக் கண்டறியும் கருவியை அமைத்தால் நல்லது என்று பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com